இணையத்தில் வெளியானது பாகுபலி 2 - அதிர்ச்சியில் படக்குழுவினர்!

 
Published : Apr 28, 2017, 09:28 AM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
இணையத்தில் வெளியானது பாகுபலி 2 - அதிர்ச்சியில் படக்குழுவினர்!

சுருக்கம்

movie crew shocked that bahubali released in internet

தமிழகத்தில் இன்று பாகுபலி-2 வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் சட்ட விரோதமாக இணையதளத்தில் வெளியிடப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படத்தியுள்ளது.

தமிழகம் உட்பட உலகம் முழுவதும்  இன்று பாகுபலி-2  9 ஆயிரம் திரையரங்களில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பட விநியோகிஸ்தர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையால் பாகுபலி தமிழில் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. 

ஆனாலும் இரு தரப்பு பேச்சு வார்த்தைகளுக்கும் பிறகு சற்று தாமதமாக பாகுபலி 2 வெளியிடப்பட்டது. இந்தப்படம் இன்று காலை 5 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததது. தற்போது பிரச்சனை தீர்க்கப்பட்டதால் தாமதமாக வெளியிடப்பட்டுள்ளது.

 

தமிழகம் முழுவதும் 650 திரையரங்குகளில் தமிழில் பாகுபலி-2 படம் வெளியிடப்பட்டுள்ளது..

இந்நிலையில் பாகுபலி 2 சற்று நேரத்துக்கு முன் முழுப்படமும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்ட விரோதமாக இன்று காலை 8 மணிக்கே பாகுபலி 2 இணையதளத்தில் வெளியிடப்பட்டதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!