சொன்னதை செஞ்சாத்தான் பேச்சு வார்த்தை….சசிகலா அணியினருக்கு பாண்டியராஜன் எச்சரிக்கை…

 
Published : Apr 28, 2017, 08:35 AM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
சொன்னதை செஞ்சாத்தான் பேச்சு வார்த்தை….சசிகலா அணியினருக்கு பாண்டியராஜன் எச்சரிக்கை…

சுருக்கம்

mofoi press meet

ஓபிஎஸ் அணி சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றினால் தான் பேச்சு வார்த்தை நடத்த முடியும் என்று முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் சசிகலா அணியினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அதிமுக இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இலு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஓபிஎஸ் தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.

இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் சம்மதம் தெரிவித்தனர். ஆனால் அணிகள் இணைவதற்கு ஓபிஎஸ் தரப்பினர் இரண்டு முக்கிய நிபந்தனைகளை விதித்தனர்.

ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விபிஐ விசாரணை நடத்த அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என்றும், சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்தனர்.

இதனை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் பேச்சு வார்த்தைக்கு நாங்கள் தயாராகஇருக்கிறோம் என சசிகலா தரப்பினர்  தொடர்ந்து கூறிவருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், பேச்சுவார்த்தை நடத்த நாங்களும் தயாராக இருக்கிறோம் என கூறினார்.

ஆனால் நாங்கள் விதிக்க நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டும்தான் பேச்சு வார்த்தை நடக்கும் என உறுதிபடத் தெரிவித்தார், இது தொடர்பாக இன்று கே.பி.முனுசாமி விளக்கமளிப்பார்  என்றும் பாண்டியராஜன் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!