இதை செய்ய தவறினால்.. டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும்.. அதட்டிய நீதி மன்றம், அலறிய டாஸ்மாக் நிர்வாகம்.

Published : Apr 18, 2022, 06:11 PM IST
இதை செய்ய தவறினால்.. டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும்.. அதட்டிய நீதி மன்றம், அலறிய டாஸ்மாக் நிர்வாகம்.

சுருக்கம்

அது இன்று நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மலைப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளின் கண்ணாடி பாட்டில்களில் மதுபானங்களை வனப்பகுதியில் வீசி செல்வதால், 

மலை வாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மார்க் கடைகள் கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பாக திட்டத்தை வகுக்க விட்டால் அங்குள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடையை மூடுவோம் என்பதே ஆதிமுக திமுக என்ற இரண்டு திராவிடக் கட்சிகளும் தேர்தல் வாக்குறுதியாக கூறி வருகிறது. ஆனால் இன்றுவரை கொடுத்த வாக்குறுதியை அக்காட்சிகள் நிறைவேற்றவில்லை. இதில் கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஒரு படி மேலே சென்று பூரண மதுவிலக்கு கொள்கையை  வாக்குறுதி அளித்தது திமுக. ஆனால் 2021  சட்டமன்ற தேர்தலில் அதுபோன்ற எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை.

இந்த இரு கட்சிகளும் மாறி மாறி டாஸ்மாக்கை நம்பிய அரசு நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அதனாலேயே இரு கட்சிகளும் டாஸ்மாக்கை மூட முன்வராமல் காலம் தாழ்த்தி வருகின்றன. கடந்த 2006 ஆம் ஆண்டு தொடக்கத்தில் மொத்தம் 6 ஆயிரத்து 736 டாஸ்மாக் கடைகள் இருந்தன. இந்த எண்ணிக்கையில்  40 கடைகள் குறைக்கப்பட்டு 2011ஆம் ஆண்டு 6 ஆயிரத்து 696 டாஸ்மாக் கடைகள் மட்டுமே இயங்கின.

பின்னர் ஜெயலலிதா தலைமையிலான அடுத்த ஐந்து ஆண்டு ஆட்சியில் 19 கடைகள் புதிதாக தொடங்கப்பட்டது. இதனால் 2016ஆம் ஆண்டு தொடக்கத்தில் தமிழகத்தில் மொத்தம் 6 ஆயிரத்து 715  கடைகள் இயங்கின. அடுத்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெற்ற நிலையில் கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டது. பூரண மதுவிலக்கு முழக்கத்தை திமுக பாமக உள்ளிட்ட கட்சிகள் எழுப்பின இதனால் ஏற்பட்ட நெருக்கடியால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என ஜெயலலிதா அரசு அறிவித்தது.

2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற நிலையில் முதற்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. பின்னர் எடப்பாடி பழனிச்சாமி 500 கடைகள் மூடப்படும் என அறிவித்தார். இந்நிலையில் 2016-2021 காலகட்டத்தில் மட்டும் 1290 கடைகள் மூடப்பட்டன. தற்போது டாஸ்மாக் கடைகள் மொத்த எண்ணிக்கை 1311 ஆக உள்ளது.

படிப்படியாக டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படும் என ஸ்டாலின் கூறியிருந்தாலும் அதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. இந்நிலைதான் மலைவாசஸ்தலங்கள் உள்ள டாஸ்மாக் கடையில் கண்ணாடி பாட்டிலில் திரும்ப பெறுவது தொடர்பான திட்டம் வகுக்காவிட்டால் அங்குள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.  அப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மது பாட்டில்கள் குவிந்துகிடப்பது  தொடர்பாக இணையத்தில் வெளியான காணொளி காட்சி அடிப்படையாக வைத்து வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

அது இன்று நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மலைப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளின் கண்ணாடி பாட்டில்களில் மதுபானங்களை வனப்பகுதியில் வீசி செல்வதால், அவற்றை விலங்குகள் மிதிப்பதால் அவைகள் கடுமையான காயம் அடைந்ததாகவும் அடுத்த மூன்று மாதங்களில் அவைகள் இறந்து விடுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மலை வாசஸ்தலங்களில் மதுபாட்டில், கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவதற்காக 25ஆம் தேதிக்குள்  திட்டம் வகுக்கும்படி டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தவறினால் மலைப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என எச்சரித்தனர். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!