மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா... முகக் கவசம் அணிவது கட்டாயம்.. மாநில அரசு அதிரடி.

Published : Apr 18, 2022, 05:21 PM IST
மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா... முகக் கவசம் அணிவது கட்டாயம்.. மாநில அரசு அதிரடி.

சுருக்கம்

அதே நேரத்தில் மூன்றாவது அலை செங்குத்தாக வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் மீண்டும் நோய்த்தடுப்பு மற்றும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஒரு சில நாட்களாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வைரஸ் தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது

கொரோனா தோற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் முக கவசம் கட்டாயம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லி எல்லையை ஒட்டியுள்ள ஆறு மாவட்டங்களில் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவில்  பரவத் தொடங்கிய கொரோனா 150க்கும் அதிகமான நாடுகளை கபளீகரம் செய்துள்ளது. இதுவரை கோடிக்கணக்கானோர் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.  பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் மூன்றாவது அலை கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொடற்று 4வது அலை  ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் உச்சத்தை அடைய கூடும் என  எச்சரிக்கப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் மூன்றாவது அலை செங்குத்தாக வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் மீண்டும் நோய்த்தடுப்பு மற்றும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஒரு சில நாட்களாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வைரஸ் தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவில் பல மாநிலங்களில் வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. நேற்று ஒப்பிடும்போது இன்று பாதிப்பு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. குறிப்பாக டெல்லியில் கடந்த 4 நாட்களாக பரவல் சீராக உயர்ந்து வருகிறது. இது கொரோனா நான்காவது அறையின் துவக்கமாக இருக்குமோ என அஞ்சப்படுகிறது. பரவல் சில வாரங்களாக அதிகரித்துவரும் நிலையில்  இது பொதுமக்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் கடந்த சில வாரங்களாக பாதிப்பு இறங்குமுகமாக இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் வைரஸ் தொற்று  அதிகரிக்கிறது. அதற்கான காரணம் என்ன என்பது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு  வருகின்றனர். பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என டெல்லி அரசு ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் டெல்லியின் எல்லையை ஒட்டியுள்ள உத்தரப்பிரதேசத்தின் 6 மாவட்டங்கள் முகக் கவசம்அணிவது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படியே கவுதம புத்தர் நகர், மீரட்,  ஹாபூர்,  புலந்து சாகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் புதிய உத்தரவுகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தேசியத் தலைவராக நிதின் நபின் நியமிக்கப்பட்டது ஏன்..? பாஜகவின் எதிர்காலத்திற்கான பலே திட்டம்..!
இனி நாடே விசில் போடும்.. மக்கள் சின்னம் விசில்.. வெற்றி ஆரம்பம்.. தளபதி விஜய் ஹேப்பி.. தவெக குஷி!