ஏசியாநெட் நியூஸ் மற்றும் சிபோர் தேர்தலுக்கு குஜராத் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை தற்போது வெளியிட்டு உள்ளது.
மொத்தம் 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு, 2017-ல் நடந்த தேர்தலில் 99 இடங்களில் பாஜக வென்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. 77 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்கவில்லை. எனினும், இந்தத் தேர்தலில் காங்கிரஸைவிடவும் ஆம் ஆத்மி கட்சிதான் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டுகிறது.
அதேபோல காங்கிரஸ் கட்சியும் தீவிரம் காட்டி வருகிறது. இருப்பினும் ஆளும் பாஜக தொடர்ந்து ஆட்சியை தக்க வைக்கும் வகையில் பிரச்சாரங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில் ஏசியாநெட் நியூஸ் மற்றும் சிபோர் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை தற்போது வெளியிட்டு உள்ளது.குஜராத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக பெரும்பான்மையுடன் 48 சதவீத வாக்குகளுடன் ஏழாவது முறையாக வெற்றி பெறும் என்று கணித்துள்ளது.
இதையும் படிங்க..நவம்பர் 1 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
182 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 1,82,557 வாக்காளர்களின் கருத்தை முறையான மாதிரி முறையைப் பயன்படுத்தி எடுத்த சர்வே முடிவை விரிவாக இங்கு பார்க்கலாம். அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸின் வாக்குகளை பிரிகிறது. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் முறையே 31 மற்றும் 16 சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது. குஜராத் தேர்தல் இப்போது நடத்தப்பட்டால், 182 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பாஜக 133 முதல் 143 இடங்களைப் பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி முறையே 28 முதல் 37 மற்றும் 5 முதல் 14 இடங்களைப் பெறலாம். காங்கிரஸின் வாக்கு சதவீதம் 10 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது. அதே சமயம் பாஜகவின் வாக்கு சதவீதம் ஒரு சதவீதமும், மற்றவர்களுக்கு ஐந்து சதவீதமும் குறையும். தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு, ஆம் ஆத்மிக்கு சாதகம் இருப்பதாகவும், அதன் வாக்குப் பங்கு 16 சதவீதம் வரை உயரக்கூடும் என்றும் தெரிவிக்கிறது.
ராகுல் காந்தியின் 'பாரத் ஜோடோ யாத்ரா' இன்னும் அங்கு சென்றடையவில்லை என்றாலும், மாநிலத்தில் உள்ள வாக்காளர்கள் மீது சிறிதளவு தாக்கம் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இந்த யாத்திரை தென் மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தாலும், குஜராத்தில் உள்ள வாக்காளர்களின் மனதில் அது எந்தவித பாதிப்பையும் உண்டாக்கவில்லை.
ஆம் ஆத்மி கட்சி அதிக காங்கிரஸ் வாக்காளர்களை ஈர்த்து வருகிறது. 2017 சட்டமன்றத் தேர்தலில் 66 சதவிகித ஆம் ஆத்மி வாக்காளர்கள் காங்கிரசுக்கு வாக்களித்தனர். 21 சதவிகிதத்தினர் மட்டுமே பாஜகவிற்கு வாக்களித்துள்ளனர். காங்கிரஸின் இந்தச் சரிவு மற்றும் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிந்ததன் விளைவாக, பாஜகவுக்கு பலன் கிடைத்து வருகிறது.
இதையும் படிங்க..மதுரை உசிலம்பட்டியில் தெரிந்த எலான் மஸ்க்கின் சாட்டிலைட் - இணையத்தில் வைரலாகும் சூப்பர் வீடியோ !!
குஜராத்தில் பாஜக வாக்காளர்கள் அந்தக் கட்சிக்கு வாக்களிப்பது முதன்மையாக பிரதமர் நரேந்திர மோடியின் இமேஜ் மற்றும் மாநிலத்தில் அவரது அரசு செய்து வரும் வளர்ச்சிப் பணிகள்தான். பதிலளித்தவர்களில் 34 சதவீதம் பேர், மாநிலத்தில் பாஜக அரசின் செயல்பாடுகளை ‘நல்லது’ என்றும், 9 சதவீதம் பேர் ‘சிறந்தது’ என்றும் மதிப்பிட்டுள்ளனர்.
பதிலளித்தவர்களில் 46 சதவீதம் பேர் ஒட்டுமொத்த ஆட்சியின் அடிப்படையில் முதல்வர் பூபேந்திர படேலின் செயல்பாடு குறித்து திருப்தி அடைந்துள்ளனர். ஒன்பது சதவீதம் பேர் பாஜக தலைவரின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக மதிப்பிட்டுள்ளனர். கணக்கெடுக்கப்பட்டவர்களில் 34 சதவீதம் பேர் படேல் மீண்டும் குஜராத்தின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக பதவியேற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
குஜராத்தில் உள்ள பெரும்பாலான வாக்காளர்கள் பாஜக அரசிடம் இரண்டு முக்கிய கோரிக்கைகளை மட்டுமே வைத்துள்ளனர். வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைத்தல். கடன்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைத்தல், 300 யூனிட் வரை இலவச மின்சாரம் மற்றும் அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை மேம்படுத்துதல், விவசாயிகளின் விளைநிலங்களுக்கு பாசனம் செய்ய ஒரு நாளைக்கு குறைந்தது 12 மணிநேரம் மின்சாரம் வழங்க வேண்டும் என்று பல கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சியை பொறுத்த வரையில், 43 சதவீத வாக்காளர்கள், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான கட்சிக்கு வாக்களிக்க ஒரே காரணம், குஜராத்தில் அவர்கள் பிரச்சாரம் செய்த போது அளித்த இலவசங்கள் மற்றும் தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதிகள் தான். 2017 குஜராத் தேர்தலில் பாஜக 99 இடங்களிலும், காங்கிரஸ் 77 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும், BTP 2 இடங்களிலும், NCP 1 இடங்களிலும் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக.. காங்கிரஸ் & ஆம் ஆத்மி நிலை ? ஏசியாநெட் நியூஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள் !