பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பாவின் வீட்டை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி திமுக அமைச்சர் கீதா ஜீவன் வீட்டை முற்றுகையிட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
திமுக, பாஜக தலைவர்கள் இடையேயான வார்த்தைப் போர் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதன்படி அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசியது மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சருக்கு பதில் அளிக்கும் விதமாக பாஜக மாநில துணைத்தலைவரான சசிகலாவும் அமைச்சர் குறித்து சில காட்டமான கருத்துகளை வெளியிட்டார்.
வேலியே பயிறை மேய்வதா? கோவையில் டிவி திருடிய போலீசை கண்டு மக்கள் அச்சம்
இதனைத் தொடர்ந் தூத்துக்குடி மாவட்டம் தபால் தந்தி நகரில் உள்ள சசிகலா புஷ்பாவின் வீடு, கார் மீது சிலர் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். “பாஜகவை கொள்கை ரீதியாக தாக்க முடியாத திமுக குண்டர்கள்,கைகூழிகள் எனது இல்லத்தையும், காரையும் சேதப்படுத்தினர். இதற்காக அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை எங்களது அரசியல் அதிரடியாக தான் இருக்கும்” என்று சசிகலா புஷ்பா குற்றம் சாட்டி இருந்தார்.
கொரோனா பாதித்த பகுதியில் அனைவருக்கும் பரிசோதனை? அமைச்சர் விளக்கம்
மேலும் சசிகலா புஷ்பாவின் வீடு தாக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும், மாநிலத் தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து அமைச்சரின் வீட்டை பாஜகவினர் முற்றுகையிட முயன்றனர்.
மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் கடந்து அமைச்சரின் வீட்டை முற்றுகையிட சென்றனர். வீட்டை முற்றுகையிட்டால், கைது நடவடிக்கை எடுக்கப்டும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர். இருப்பினும் பாஜகவினர் தொடர்ந்து முன்னேறியதைத் தொடர்ந்து அனைவரையும் கைது செய்தனர்.