நிலுவைத்தொகையை செலுத்தியாச்சு.. அப்படி இருக்கும் போது மின் வழங்கலை நிறுத்துவது நியாயமா.. செந்தில் பாலாஜி.!

By vinoth kumar  |  First Published Aug 20, 2022, 6:31 AM IST

எரிசக்தித்துறை நிர்ணயித்த மாதாந்திர நிலுவைத் தொகை ரூ.361 கோடி, கடந்த 4-ம் தேதி வழங்கப்பட்டுவிட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.


எரிசக்தித்துறை நிர்ணயித்த மாதாந்திர நிலுவைத் தொகை ரூ.361 கோடி, கடந்த 4-ம் தேதி வழங்கப்பட்டுவிட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க விற்க நேற்று முன்தினம் இரவு முதல் மத்திய அரசு தடை விதித்துள்ளது. மின்பகிர்மான நிறுவனங்கள் ரூ.5,100 கோடி பாக்கி நிலுவைத் தொகை செலுத்த தவறியதால் மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான மின்பகிர்வில் மத்திய அரசு தலையிடுவதால் பல மாநிலங்கள் மின்தட்டுப்பாட்டால் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- இலவசம் விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம்.. டார் டாரா கிழித்த அமைச்சர் செந்தில் பாலாஜி.

இந்நிலையில், மின் தடை ஏற்பட்டுவிடும் என மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ஒன்றிய அரசின் எரிசக்தித்துறை நிர்ணயித்த மாதாந்திர நிலுவைத் தொகை ரூ.361 கோடி 4.8.2022 அன்றே வழங்கப்பட்டுவிட்டது. ஒன்றிய அரசின் "PRAAPTI PORTAL" இணையதளத்தில் மின் உற்பத்தியாளர்கள் தங்களுக்கான நிலுவைத்தொகையை வெளியிட முடியும். ஆனால், TANGEDCO பதில் அளிக்கும் வழிவகை இல்லை.

ஒன்றிய அரசின் எரிசக்தித்துறை நிர்ணயித்த மாதாந்திர நிலுவைத் தொகை ரூ.361 கோடி 4.8.2022 அன்றே வழங்கப்பட்டுவிட்டது.

ஒன்றிய அரசின் ’PRAAPTI PORTAL' இணையதளத்தில், மின் உற்பத்தியாளர்கள் தங்களுக்கான நிலுவைத்தொகையை வெளியிட முடியும், ஆனால் TANGEDCO பதில் அளிக்கும் வழிவகை இல்லை. (1/3) pic.twitter.com/6Y0uZnZNAI

— V.Senthilbalaji (@V_Senthilbalaji)

 

 

நிறுவனங்கள் குறிப்பிடும் நிலுவைத்தொகை  வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், அதனை நிறுவனங்கள் பெற்றுக் கொண்டதாக குறிப்பிடவில்லை. சர்சைக்குரிய பட்டியலுக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பும் அவகாசமும் இல்லாமல் தன்னிச்சையாக மின் வழங்கலை நிறுத்துவது ஏற்புடையதில்லை. சில காற்றாலை மற்றும் சூரிய ஒளி நிறுவனங்களுக்கு மட்டுமே குறைவான தொகை நிலுவையில் உள்ளது. அதுவும் ஓரிரு நாட்களில் வழங்கப்பட்டுவிடும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க;-  ஷாக்கிங் நியூஸ்.. மின்சாரம் வாங்க தடை.. தமிழகம் இருளில் மூழ்கும் அபாயம்..!

click me!