2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட மோடி வெற்றி? எந்த மாவட்டம் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்.!

By vinoth kumarFirst Published Sep 17, 2022, 12:53 PM IST
Highlights

 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி வெற்றி  என மதுரை மாநகர் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பாஜக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

2024ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி வெற்றி என ஒட்டபட்டுள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது.

மத்தியில் பாஜக ஆட்சி இருந்தாலும் கூட தமிழகத்தில் அக்கட்சியால் கால் ஊன்ற முடியவில்லை. தென்னிந்தியாவில் கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட இடங்களில் ஓரளவுக்கு பாஜகவின் செல்வாக்கு வளர்ந்து வரும் நிலையில், தமிழகத்தில் அதன் வளர்ச்சி சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. இந்நிலையில், தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கை அதிகரிக்க பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து அதிரடி அரசியலை ஆரம்பித்து வருகிறார். 

இதையும் படிங்க;- எப்போதும் மக்கள் பற்றிய சிந்தனை.. மோடிக்கு மாற்றே இல்லை.. பிரதமருக்கு மாஸா வாழ்த்து சொன்ன அண்ணாமலை.

இந்நிலையில், பிரதமர் மோடியின் 72வது பிறந்த நாளை இனிப்பு மற்றும் போஸ்டர் ஓட்டியும் தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக மதுரையில் பிரதமர் மோடி தொடர்பான போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது. அதில், 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி வெற்றி  என மதுரை மாநகர் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பாஜக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தொடர்ந்து வருகிற 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட வேண்டும் எனவும்  பாரதிய ஜனதா கட்சினர் விருப்பம்  தெரிவிக்கின்றனர். இந்நிலையில், தற்போது மதுரை மாநகர் முழுவதும் நரேந்திர மோடியின் பிறந்தநாள் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வரும் 2024  நாடாளுமன்ற தேர்தலில் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோர் தமிழகத்தில் போட்டியிட வேண்டுமென இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ஏற்கனவே வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க;-  pm narendra modi birthday:பிரதமர் மோடியின் வெற்றிப் பயணம் ! டீ கடை டூ டெல்லி கோட்டை வரை! ஸ்வாரஸ்ய பார்வை

click me!