9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை.. முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் அவசர கோரிக்கை.. என்ன காரணம் தெரியுமா?

Published : Sep 17, 2022, 12:19 PM ISTUpdated : Sep 17, 2022, 12:22 PM IST
9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை.. முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் அவசர கோரிக்கை..  என்ன காரணம் தெரியுமா?

சுருக்கம்

தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1 சளிக்காய்ச்சல் உள்ளிட்ட பலவகையான காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகின்றன. நடப்பாண்டில் இந்த வகை காய்ச்சல்கள் குழந்தைகளையே அதிக அளவில் தாக்குவது பெரும் கவலையையும், அச்சத்தையும் அளிக்கிறது.

தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதிகளில் என்னென்ன வகையான காய்ச்சல்கள் பரவுகின்றன? நோய் தாக்கினால் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1 சளிக்காய்ச்சல் உள்ளிட்ட பலவகையான காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகின்றன. நடப்பாண்டில் இந்த வகை காய்ச்சல்கள் குழந்தைகளையே அதிக அளவில் தாக்குவது பெரும் கவலையையும், அச்சத்தையும் அளிக்கிறது.

இதையும் படிங்க;- குழந்தைகளுக்கு வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்.. பள்ளிகளுக்கு இன்றுமுதல் விடுமுறை அறிவிப்பு..

இன்னொருபுறம் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. எந்தெந்த பகுதிகளில் காய்ச்சல் அதிகமாக பரவுகிறது என்பதைக் கண்டறிவதற்கு சோதனையோ, நோய்த்தடுப்பு நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை. இது காய்ச்சல் கட்டுக்கடங்காமல் பரவ வகை செய்து விடும்.

தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதிகளில் என்னென்ன வகையான காய்ச்சல்கள் பரவுகின்றன? நோய் தாக்கினால் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அனைத்து கிராமங்களிலும் மருத்துவ முகாம்களை தமிழக அரசு நடத்த வேண்டும்.

இதையும் படிங்க;-  26 வயதிலேயே நான் கருணாநிதியை எதிர்த்தவன்.. இந்த எடப்பாடியெல்லாம் எம்மாந்திரம்.. கெத்து காட்டும் டிடிவி.தினகரன்

குழந்தைகள் ஒன்று கூடி விளையாடும் பள்ளிகள் வாயிலாகத் தான் காய்ச்சல் அதிக அளவில் பரவுவதாகத் தோன்றுகிறது. குழந்தைகளைக் காக்கவும், நோய்ப்பரவலை கட்டுப்படுத்தவும், நிலைமை சீரடையும் வரை 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். குழந்தைகளுக்கு வேகமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 25ம் தேதி வரை 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க;- கண்ணுக்கு முன்னால் தெரியும் ஆபத்து.. சென்னையை காப்பாத்துங்க.. தலையில் அடித்துக்கொண்டு அலறும் ராமதாஸ்.!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!