பெரியார் திடலுக்கு வந்தேன் என்றால் என் தாய் வீட்டுக்கு வந்துள்ளேன் என அர்த்தம்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்.!

By vinoth kumarFirst Published Sep 17, 2022, 11:46 AM IST
Highlights

பெரியாரை உலக தலைவராக உயர்த்தி காட்ட தான் பெரியார் உலகத்தை உருவாக்கி உள்ளோம். இது பெரியாருக்கு கிடைத்துள்ள பெருமை மட்டுமல்ல, இந்த ஆட்சிக்கு இந்த மக்களுக்கு கிடைத்துள்ள பெருமை. தமிழ் சமுதாயத்தை அறிவார்ந்த சமுதாயமாக மாற்றும் பணியில் திராவிடர் கழகம் இருந்து வருகிறது. 

பெரியாரை உலக தலைவராக உயர்த்தி காட்ட தான் பெரியார் உலகத்தை உருவாக்கி உள்ளோம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

திருச்சி மாவட்டம் சிறுகனூரில் 30 ஏக்கரில் அமையவுள்ள ”பெரியார் உலகம்” சென்னை பெரியார் திடலில் இருந்து காணொலி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து, பெரியார் திடலில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில்;-  சமூக நீதி, சமத்துவம், பகுத்தறிவு, பெண்ணுரிமை உள்ளிட்டவற்றின் தலைமையகமாக பெரியார் திடம் விளங்குகிறது. ஓட்டுமொத்த இந்தியாவுக்கு சமூக நீதியின் தலைமையகமாக பெரியார் திடல் திகழ்கிறது. பெரியார் திடலுக்கு வந்தேன் என்றால் என் தாய் வீட்டுக்கு வந்துள்ளேன் என அர்த்தம். தாய் வீட்டுக்கு மகன் வருவதில் ஆச்சரியம் இல்லை. பெரியார் திடலுக்கு வந்தாலே புத்துணர்சி வருகிறது. 

இதையும் படிங்க;- காசி பயணம் முதல் தீண்டாமை எதிர்ப்பு வரை.. பகுத்தறிவு பகலவன் பெரியார் வாழ்க்கை வரலாறு குறிப்புகள்..!

பெரியாரை உலக தலைவராக உயர்த்தி காட்ட தான் பெரியார் உலகத்தை உருவாக்கி உள்ளோம். இது பெரியாருக்கு கிடைத்துள்ள பெருமை மட்டுமல்ல, இந்த ஆட்சிக்கு இந்த மக்களுக்கு கிடைத்துள்ள பெருமை. தமிழ் சமுதாயத்தை அறிவார்ந்த சமுதாயமாக மாற்றும் பணியில் திராவிடர் கழகம் இருந்து வருகிறது. நாங்கள் செல்லும் பாதை பெரியார் பாதை தான். பெரியார் சிந்தனைகளை மொழிபெயர்த்து உலகின் பல்வேறு மொழிகளில் வெளியிட இருக்கிறோம். தந்தை பெரியார் உலக தலைவர் என்பதை உலகம் இன்றைய  ஏற்றுக்கொண்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.  

இந்நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஆசிரியர் வீரமணி, திமுக எம்.பி. தயாநிதி மாறன், அமைச்சர்கள் சேகர் பாபு, எ.வ.வேலு, செஞ்சி மஸ்தான், மு.நாசர், கே.என்.நேரு, மேயர் பிரியா, துணை மேயர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

இதையும் படிங்க;- தந்தை பெரியாரின் 144 -வது பிறந்த நாள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை..!

click me!