லஞ்ச ஒழிப்பு சோதனை: அதிமுக மாஜி அமைச்சர்கள்தான் தங்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க வேண்டும்- ஓபிஎஸ்.

By Ezhilarasan BabuFirst Published Sep 17, 2022, 12:46 PM IST
Highlights

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தனது கடமையை செய்கிறது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்தான் தங்களை குற்றமற்றவர்கள் என நிரூபிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம்  கருத்து தெரிவித்துள்ளார்.
 

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தனது கடமையை செய்கிறது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்தான் தங்களை குற்றமற்றவர்கள் என நிரூபிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம்  கருத்து தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்தது. இதேபோல் எஸ். பி வேலுமணி இல்லத்திலும் சோதனை நடந்தது. தற்போது இந்த சோதனைகளை மேற்கோள்காட்டி அதிமுகவினர் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: பெரியார் திடலுக்கு வந்தேன் என்றால் என் தாய் வீட்டுக்கு வந்துள்ளேன் என அர்த்தம்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்.!

இந்நிலையில்தான் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வம் லஞ்ச ஒழிப்புத்துறை தனது கடமையை செய்கிறது என கூறியுள்ளார். தந்தை பெரியாரின் 144வது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா சாலை ஜெமினி பாலம் அருகே பெரியார் சிலையில் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள்  மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 

இதையும் படியுங்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த அமலாக்கத்துறை.. அமைச்சரின் சொத்துக்களை முடக்கி அதிரடி..!

பண்ருட்டி ராமச்சந்திரன் பெரியார் முதல் ஜெயலலிதா வரை அரசியலில் பயணித்தவர். எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது ஐநா மன்றத்துக்குச் சென்று இந்தியாவில் ஒற்மைப்பாடு பற்றி விளக்கமாக பேசியவர். அரசியல் காரணங்களுக்காக சிலர் அவரை ஏளனமாகப் பேசிக் கொண்டுள்ளனர். அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு அவர் ஆற்றிய தொண்டை பார்க்க வேண்டும் என்றார். ஏழைகளுக்காகவும், தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம்தான் அதிமுக, ஜெயலலிதா அவர்கள் எனக்கு முதல்வர் பொறுப்பை வழங்கினாலும் நான் விசுவாசமுள்ள தொண்டனாக தான் இருந்தேன் என்றார்.

அப்போது முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஓ.பன்னீர் செல்வம், லஞ்ச ஒழிப்புத் துறை தனது கடமையைச் செய்கிறது, ஆனால் அதிமுக அமைச்சர்கள் தான் தங்களை குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும் என கூறினார்.  
 

click me!