நல்லா இருக்கீங்களா? மதுரை மண்ணில் தமிழ் பேசி அதிரவைத்த மோடி... ‘வெற்றிவேல், வீர வேல்’ முழக்கத்துடன் உற்சாகம்!

By vinoth kumarFirst Published Apr 2, 2021, 1:18 PM IST
Highlights

மீனாட்சியம்மன் கோயில் அமைந்திருக்கும் மதுரை மண்ணுக்கு வந்தது என் பாக்கியம் என்றே கருதுகிறேன் என பிரதமர் மோடி கூறியு்ளளார்.

மீனாட்சியம்மன் கோயில் அமைந்திருக்கும் மதுரை மண்ணுக்கு வந்தது என் பாக்கியம் என்றே கருதுகிறேன் என பிரதமர் மோடி கூறியு்ளளார்.

மதுரையில் நடைபெற்று வரும் தேசிய ஜனநாயக கூட்டணி பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் பிரசார கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது, பிரதமர் மோடி பேசுகையில்;- வெற்றிவேல், வீரவேல் நீங்கள் எல்லாம் நல்லா இருக்கீங்களா? மதுரை வந்தது மிக்க மகிழ்ச்சி. தமிழ்ப்பாண்பாட்டின் முக்கிய மையமாக மதுரை திகழ்கிறது. புண்ணிய பூமியாகவும் வீர பூமியாகவும் மதுரை மண் விளங்குகிறது. தமிழர்களின் பாரம்பரிய கலாசாரத்தை பறைசாற்றும் இடமாக மதுரை திகழ்கிறது. 

மறைந்த தென் மாவட்ட தலைவர்கள் அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன். எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த மதுரை வீரன் படத்தை யாராலும் மறக்க முடியாது. மீனாட்சியம்மன் கோயில் அமைந்திருக்கும் மதுரை மண்ணுக்கு வந்தது என் பாக்கியம் என்றே கருதுகிறேன் என்றார். 

நாட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். மதுரை - கொல்லம் போக்குவரத்து வழித்தடம் மேம்படுத்தப்பட உள்ளது. அதன்பிறகு, தென் தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி பெறும். பல ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்திலிருந்து ஏராளமான சௌராஷ்டிர மக்கள் மதுரைக்கு வந்து குடியேறினர். சௌராஷ்டிர மக்களை மதுரை மக்கள் ஏற்றுக் கொண்டது ஒருங்கிணைந்த இந்தியாவுக்கு அடையாளம். நாடு மழுவதும் அடிப்படை உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு ரூ.100 லட்சம் கோடியை செலவிட உள்ளது என்றார். 

click me!