திமுகவை ரவுண்டு கட்டும் வருமானவரித்துறை... வளைத்து வளைத்து ரெய்டு..!

Published : Apr 02, 2021, 12:23 PM IST
திமுகவை ரவுண்டு கட்டும் வருமானவரித்துறை... வளைத்து வளைத்து ரெய்டு..!

சுருக்கம்

திமுகவுக்காக தேர்தல் பணியாற்றி வரும் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் அலுவலகத்திலும் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அங்கு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.   

திமுக தலைவர் மு.க.ஸ்ஸ்டாலினின் மருமகன் சபரீசன், கார்த்திக் மோகன், ஜுஸ்கொயர் பாலா ஆகியோரது வீடு அலுவலகங்களில் வருமானவரி சோதனை மேற்கொண்டதை அடுத்து, கரூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் 15 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் கரூரில் செந்தில் பாலாஜி வீட்டிலும் ஐ.டி ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டம் ராமேஸ்வரபட்டியில் உள்ள திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அத்துடன் கிருஷ்ணாபுரத்தில் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

முன்னதாக திமுகவுக்காக தேர்தல் பணியாற்றி வரும் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் அலுவலகத்திலும் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அங்கு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. 
 

PREV
click me!

Recommended Stories

ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!
செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!