கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது குறித்து சாா்க் நாடுகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த பிரதமா் மோடி விருப்பம் தெரிவித்திருந்தாா். பிரதமரின் இந்த முயற்சிக்கு சாா்க் அமைப்பில் இடம்பெற்றுள்ள வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட நாடுகள் சம்மதம் தெரிவித்தன. இதையடுத்து காணொலி வாயிலாக இன்று மாலை சாா்க் நாடுகளுடன் பிரதமா் மோடி ஆலோசனை நடத்துவார் என அறிவிக்கபட்டது. அதன்படி தற்போது பிரதமர் தெற்காசிய தலைவர்களுடன் உரையாடி வருகிறார்.
உலகம் முழுவதும் இத்தாலி, ஈரான், தைவான், ஜப்பான், கொரியா, அமெரிக்கா, இந்தியா என 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி இருகின்றனர். சீனாவில் மட்டும் 3,177 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவிலும் கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரபடுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரித்திள்ளது. பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் மற்றும் பொது மக்கள் கூடும் முக்கிய இடங்கள் அனைத்தும் முடப்பட்டுள்ளன.
undefined
இந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது குறித்து சாா்க் நாடுகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த பிரதமா் மோடி விருப்பம் தெரிவித்திருந்தாா். பிரதமரின் இந்த முயற்சிக்கு சாா்க் அமைப்பில் இடம்பெற்றுள்ள வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட நாடுகள் சம்மதம் தெரிவித்தன. இதையடுத்து காணொலி வாயிலாக இன்று மாலை சாா்க் நாடுகளுடன் பிரதமா் மோடி ஆலோசனை நடத்துவார் என அறிவிக்கபட்டது. அதன்படி தற்போது பிரதமர் தெற்காசிய தலைவர்களுடன் உரையாடி வருகிறார்.
திமுக பொதுச்செயலாளர் ஆகிறார் துரைமுருகன்..? விரைவில் அறிவிப்பு..!
கொரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் அனைவரும் ஒன்றிணந்து கொரோனாவை எதிர்கொள்வோம் என பிரதமர் பேசி வருகிறார். படிப்படியான நடவடிக்கைகள் மூலம் கொரோனா குறித்த அச்சம் இந்தியாவில் போக்கபட்டு வருவதாக கூறிய பிரதமர் சுமார் 1400 இந்தியர்கள் கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து மீட்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.