புதுவையில் காலவரையின்றி பள்ளிகள் மூடல்..!

By Manikandan S R SFirst Published Mar 15, 2020, 4:11 PM IST
Highlights

தமிழகத்தைப் போன்றே புதுவையிலும் பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா அச்சறுத்தல் காரணமாக மழலையர் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் இத்தாலி, ஈரான், தைவான், ஜப்பான், கொரியா, அமெரிக்கா, இந்தியா என 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி இருகின்றனர். சீனாவில் மட்டும் 3,177 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவிலும் கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரபடுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரித்திள்ளது. பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் மற்றும் பொது மக்கள் கூடும் முக்கிய இடங்கள் அனைத்தும் முடப்பட்டுள்ளன.

தமிழகத்திலும் கொரோனா பாதிற்பிற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள மழலையர் பள்ளிகள், தொடக்கப்பள்ளிகளுக்கு(எல்.கே.ஜி  முதல் முதல் 5 ஆம் வகுப்பு வரை) மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை உத்தரவிடப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் குழந்தைகள் குழுவாக சேர்ந்து விளையாடுவதை பெற்றோர் தவிர்த்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக பொதுச்செயலாளர் ஆகிறார் துரைமுருகன்..? விரைவில் அறிவிப்பு..!

இதனிடையே தமிழகத்தைப் போன்றே புதுவையிலும் பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா அச்சறுத்தல் காரணமாக மழலையர் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்ட புதுவை கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதத்தில் அரசு தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் எந்தவொரு பிராந்தியத்திலும் ஏற்றத் தாழ்வின்றி  பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

கோழைகளே.. தைரியம் இருந்தால் இளமதியை தனியாக press meet அனுப்புங்க..! வெடித்துக்குமுறும் திமுக எம்.பி..!

click me!