நாடாளுமன்ற தேர்தலையோட்டி பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இறுதி கட்ட பிரச்சாரத்தில் கலந்து கொள்ளும் வகையில், பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். இதன் காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் களம் இறங்கும் பாஜக தலைவர்கள்
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
undefined
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, ஸ்ருதி இராணி, ராஜ்நாத் சிங் என அடுத்தடுத்து தமிழகத்தில் களம் இறங்கியுள்ளனர். பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டமும், ரோட் ஷோவும் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் தமிழகத்தில் தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி 6 வது முறையாக நாளை தமிழகம் வரவுள்ளார். இதனையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மோடியின் பயணதிட்டம்
நாளை உத்தரபிரதேசம் மாநிலம் பிலிபட் பகுதியில் நடைபெறும் பொது கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி பிற்பகல் 2.30 மணிக்கு கேரள மாநிலம் பாலக்காடு செல்கிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்கு மாலை 6:30 மணிக்கு வருகிறார். சென்னை பாண்டி பஜாரில் நடைபெறும் ரோட் ஷோவில் பங்கேற்று பாஜக சார்பாக சென்னையில் போட்டியிடும் தென் சென்னை தொகுதி வேட்பாளர் தமிழிசை சௌந்தர்ராஜன், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் செல்வம், வட சென்னை வேட்பாளர் பால் கனகராஜ் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார் இதனை முடித்துக் கொண்டு அன்றைய தினம் இரவு கிண்டி ராஜ் பவனின் தங்குகிறார்.
தமிழகத்தை சுற்றும் மோடி
அதற்கு அடுத்த நாள் புதன்கிழமை சென்னையிலிருந்து வேலூருக்கு காலை 10.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்கிறார். அங்கு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜக வேட்பாளர் ஏசி சண்முகத்திற்கு ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்கிறார். தொடர்ந்து மேட்டுப்பாளையம் பகுதிக்கு மதியம் 1:45 மணிக்கு செல்கிறார் அங்கு நடைபெறும் பொது கூட்டத்தில் கலந்து கொண்டு நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளரான எல். முருகனுக்கு ஆதரவு கேட்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இந்த 2 நாள் பிரச்சார பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி மகாராஷ்டிராவிற்று நாளை மறுதினம் மாலை புறப்பட்டு செல்கிறார்.
இதையும் படியுங்கள்