
அண்மையில் இத்தாலியில் திருமணம் செய்துகொண்ட கிரிக்கெட் வீரர் விராட் போலி மற்றும் அனுஷ்கா தம்பதியினர் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் இருவ்ருக்கும் திருமணம் நடக்குமா ? இல்லையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பு வந்தனர்.
இந்நிலையில் கடந்த 11-ந்தேதி இத்தாலியில் உள்ள டுஸ்கேனியில் இருக்கும் சொகுசு விடுதியில் ஒன்றில் விராட் கோலி – அனுஷ்கா சர்மா ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர்.
மிகவும் ரகசியமாக நடத்தப்பட்ட இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்களும், குடும்ப நண்பர்களும் மட்டுமே பங்கேற்றனர்.
திருமணம் முடிந்ததைத் தொடர்ந்து புதுமண தம்பதிகள் நேற்று இந்தியாவுக்கு திரும்பினர்.
அதே நேரத்தில் கோலி இந்தியாவில் இல்லாமல் இத்தாலியில் திருமணம் செய்துகொண்டதற்கு பாஜக கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கோலி – அனுஷ்கா தம்பதியினர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.