2ஜி முறைகேடு வழக்கு.. ஆ.ராசா, கனிமொழி உட்பட அனைவரும் விடுவிப்பு..! சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு..!

 
Published : Dec 21, 2017, 10:54 AM ISTUpdated : Sep 19, 2018, 01:42 AM IST
2ஜி முறைகேடு வழக்கு.. ஆ.ராசா, கனிமொழி உட்பட அனைவரும் விடுவிப்பு..! சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு..!

சுருக்கம்

rasa and konimozhi release from 2g case

நாட்டையே உலுக்கிய 2ஜி முறைகேடு வழக்கிலிருந்து குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்பி உட்பட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2004-2014ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடந்தது. அப்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடத்தியது. அதில், முன்னாள் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதும் மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ 2011-ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்குகளின் விசாரணை கடந்த ஆறு ஆண்டுகளாக டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி. ஷைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது. அதைத் தொடர்ந்து வழக்கின் வாதங்கள் கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. இந்நிலையில், வழக்கின் தீர்ப்பு தேதி செப்டம்பர் 20-ம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அன்றைய தினத்தில் அக்டோபர் 25-ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி ஷைனி தெரிவித்தார்.

பின்னர் அக்டோபர் 25-ம் தேதி, இந்த வழக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்களை சேர்க்கும் பணிகள் நடந்துகொண்டிருப்பதால் தீர்ப்பின் தேதியை அறிவிப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் தீர்ப்பின்  தேதி வரும் நவம்பர் 7-ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

தேசிய அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால், அதுதொடர்பான அனைத்து ஆவணங்களையும் சேர்த்து தீர ஆராய்ந்து நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும் என்பதால் நீதிபதி ஷைனி ஓய்வின்றி அதிதீவிரமாக பணியாற்றுவதாக தகவல்கள் வந்தன.

ஆனால், நவம்பர் 7ம் தேதியன்று, தீர்ப்பின் தேதி டிசம்பர் 5 அன்று அறிவிக்கப்படும் என நீதிபதி ஷைனி தெரிவித்துவிட்டார். இன்றையை தினம் வழக்கில் தொடர்புடைய அனைவரையும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தார். 

அதன்படி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்டோர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியிருந்தனர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கின் தீர்ப்பு வரும் 21-ம் தேதி வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். 2ஜி வழக்கிலிருந்து ஆ.ராசா, கனிமொழி எம்பி உட்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து நீதிபதி ஷைனி தீர்ப்பளித்துள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் சிபிஐ நிரூபிக்க தவறிவிட்டதாக கூறிய நீதிபதி ஷைனி, 2ஜி வழக்குல் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து அதிரடி தீர்ப்பளித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

பிரதமர் மோடி சர்ச்சுக்கு போய்ட்டாரு.. ஸ்டாலின் எப்போ இந்து கோயிலுக்கு போவாரு? தமிழிசை கேள்வி!
விஜய் வாக்குகளால் கதிகலங்கும் திமுக..! கடைசியில் கனிமொழியை நம்பி இருக்கும் மு.க.ஸ்டாலின்..!