அத்வானியை அத்துவிட்ட அமித்ஷா … மோடி .... வாரணாசி ! ஸ்மிரிதி இராணி அமேதி … பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு !!

By Selvanayagam PFirst Published Mar 21, 2019, 8:53 PM IST
Highlights

நாடு முழுவதும் பாஜக சார்பில் போட்டியிடும் 182 வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தேர்தல் குழு உறுப்பினர் ஜெ.பி.நட்டா இன்று வெளியிட்டார். வாரணாசி  தொகுதியில் மோடியும் , அத்வானியின் ஆஸ்தான் தொகுதியான  காந்தி நகரில் அமித்ஷாவும் போட்டியிடுகின்றனர்.
 

17 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் வரும் 18 ஆம் தேதி தொடங்கி மே மாதம் 19 ஆம் தி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளன. இரு தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நிலையில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி, வேட்பு மனு, வேட்பாளர் பட்டியல் என சுறுசுறுப்பாகி விட்டன.

காங்கிரஸ் கட்சியில்  3 கட்டங்களாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் பாஜக சார்பில் போட்டியிடும் 182 வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின் தேர்தல் குழு உறுப்பினர் ஜெ.பி.நட்டா இன்று டெல்லியில வெளியிட்டார்.

அதன்படி  பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.  பிரதமர் மோடி ஒடிசா மாநிலம் பூரியில் போட்டியிடலாம் என தகவல் வெளியாகிய நிலையில், அவர் மீண்டும் வாரணாசியிலேயே போட்டியிடுகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, காந்தி நகரில் போட்டியிடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காந்தி நகர் தொகுதி பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானியின் தொகுதியாகும். 1998-ம் ஆண்டில் இருந்து அத்வானி இத்தொகுதியில் இருந்து எம்.பி.யாக இருந்து வருகிறார். இப்போது அமித்ஷாவிற்கு செல்கிறது. 

அமித்ஷா இப்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் போட்டியிடுகிறார். நிதின் கட்காரி நாக்பூரில் போட்டியிடுகிறார்.


 
விகே சிங் காசியாபாத்திலும், ஹேமமாலினி மதுராவிலும், அமேதியில் ஸ்மிருதி இரானியும் போட்டியிடுகிறார்கள். அமேதி தொகுதி ராகுல் காந்தியின் தொகுதியாகும். கடந்த முறை ஸ்மிருதி இரானி போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 

click me!