தேர்தலில் தோற்றுப்போனதும் சோறு போட்டதை சொல்லி காட்டுவார் ராமதாஸ்...! வெளியானது தைலாபுரத்து ரகசியம்...!

By ezhil mozhiFirst Published Mar 21, 2019, 8:43 PM IST
Highlights

அ.தி.மு.க.வுடன்  பா.ம.க. கூட்டணி சேர்ந்த பிறகு அரசியல் நடக்குதோ இல்லையோ ஆனால் வளமாக விருந்து நடக்கிறது. 

அ.தி.மு.க.வுடன்  பா.ம.க. கூட்டணி சேர்ந்த பிறகு அரசியல் நடக்குதோ இல்லையோ ஆனால் வளமாக விருந்து நடக்கிறது. கூட்டணி ஓ.கே.யான  உடனேயே முதல்வர், துணைமுதல்வர் உள்ளிட்ட அமைச்சர் பரிவாரங்களுக்கு தன் தைலாபுரம் தோட்டத்து பங்களாவில் செமத்தியான விருந்தை வைத்தார் ராமதாஸ். ‘நீந்துவதில் இருந்து பறப்பது வரை எல்லாமே படையலிடப்பட்டன!’ என்று இந்த விருந்தை போட்டுப் பொளந்தன எதிர்கட்சிகள். 

விருந்து கொடுத்தவர்களும் சரி அத்தோடு விட்டிருக்கலாம். ஆனால் அதன் பிறகு அன்புமணி சென்று விஜயகாந்தை பார்ப்பது, ராமதாஸ் சென்று விஜயகாந்தை சந்திப்பது, தேர்தல் அறிக்கைக்குப் பின் தைலாபுரம் தோட்டத்துக்கு அ.தி.மு.க. வி.ஐ.பி.க்கள் படையெடுப்பது, வரும்போதெல்லாம் விருந்து அமர்க்களப்படுதுவது, சுதீஷ் அண்ட்கோ சென்று ராமதாஸை சந்திப்பது, காலை டிஃபனை அங்கே முடிப்பது...என்று ஒரே விருந்து மயத்தினால் அ.தி.மு.க - பா.ம.க. - தே.மு.தி.க. கூட்டணியானது கமகமக்கிறது. 

தைலாபுர தோட்டத்தில் விருந்தினர்களுக்கான இலைகளில் படைக்கப்படுவதெல்லாம் அசைவம் என்பதாலோ என்னவோ இந்த கூட்டணியின் சூத்ரதாரியான பா.ஜ.க.கவின் முக்கியஸ்தர்கள் செல்வதில்லை! என்று தனி டிராக் ஓடிக் கொண்டிருக்கிறது.இந்நிலையில், ராமதாஸ் வீட்டில் சதாசர்வ காலமும் அ.தி.மு.க.வினர் மற்றும் தே.மு.தி.க.வினர் இருவரும் விருந்துகளில் அமர்ந்து கொண்டேயிருப்பதால் கடுப்பாகி, கண்கள் சிவந்த தி.மு.க.வினர்...”அது என்ன தைலாபுரம் தோட்டமா இல்ல தலப்பாகட்டு பிரியாணி ஹோட்டலாய்யா? ஆன்னா ஊன்னா அங்கே போயி உக்காந்து சாப்பிடுறீங்க? டாக்டர் வீட்டுல கை நனைக்கிறதுக்கு முன்னாடி நல்லா யோசிங்க...திராவிட கட்சிகளோடு இனி கூட்டணி வைக்க மாட்டோம்! அப்படிங்கிற பொய் சத்தியத்துக்காக தாயையே பழித்தவர். 

இந்த தேர்தல்ல பா.ம.க. எப்படியும் தோற்கதான் போவுது, தோல்வி ரிசல்ட் வர ஆரம்பிச்சதுமே...’தேர்தல் கூட்டணி வைத்த பாவத்துக்காக ஆளுங்கட்சியினரும், மாஜி நடிகர் விஜயகாந்தின் உறவினர் உள்ளிட்ட கட்சியினரும் எங்கள் வீட்டுக்கு வந்து அடிக்கடி சாப்பாடு செய்யச் சொல்லி உண்டு, நாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து வைத்திருந்த சொத்தை தின்றே அழித்துவிட்டார்கள். உண்டதுக்கு நன்றிக்கடன் இல்லாமல் உள்ளடி வேலைபார்த்து எங்கள் வெற்றியையும் கெடுத்துவிட்டனர். பா.ம.க.வின் தோல்விக்கு காரணமான அ.தி.மு.க. மற்றும்  தே.மு.தி.க. இரு கட்சியின் நிர்வாகிகளின் வயிறும் வீணாய் போகட்டும்.

ஏற்கனவே காடுவெட்டி குருவுக்கு விருந்துல எதையோ கலந்து கொடுத்துதான் அவரை படுத்த படுக்கையா ஆக்கிட்டாங்கன்னு அவரோட தங்கச்சி சமீபத்துல ஓப்பன் பேட்டி கொடுத்துச்சு. அதனால கை நனைக்கிறதுக்கு முன்னாடி யோசிங்க!விருந்துக்கு ஆசைப்பட்டு வீணாப் போயிடாதீங்க!’  என்று தாறுமாறக சோஷியல் மீடியா வழியே விமர்சனத்தைக் கொட்டித் தீர்த்துக் கொண்டுள்ளனர். ஏக கடுப்பில் இருக்கிறது பா.ம.க.

click me!