கடும் சர்ச்சைக்கிடையே சிவகங்கை வேட்பாளர் ஆனார் எச்.ராஜா ! அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியீடு !!

By Selvanayagam PFirst Published Mar 21, 2019, 8:18 PM IST
Highlights

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் 5 தொகுதிகளின் வேட்பாளர்கள்  பட்டியலை பாஜக தேர்தல் கமிட்டி உறுப்பினரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா இன்று வெளியிட்டார்.
 

வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. 

இதில் அதிமுக 20… பாஜக 5 … பாமக  7… தேமுதிக 4 .. புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, தமாகா, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள்  தலா ஓர் இடத்திலும் போட்டியிடுகின்றன. இந்த கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளில் யார்? யார் போட்டியிடுகிறார்கள் என்ற விவரம்  தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பாஜக தேர்தல் கமிட்டி உறுப்பினரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா, நாடு முழுவதும் பாஜக போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை கன்னியாகுமரி தொகுதியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், சிவகங்கையில் எச்.ராஜாவும் , ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரனும், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணனும், தூத்துக்குடியில் தமிழிசையும் போட்டியிடுகின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பாஜக அதிகாரப்பூர்வமாக இன்றுதான் வேட்பாளர்களை அறிவித்தாலும், இந்த விவரத்தை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்றே அறிவித்து விட்டார். இது அந்த கட்சிக்குள் சலசலப்பை உருவாக்கினாலும், எச். ராஜா சொன்னது தான் இன்று நடத்திருக்கிறது.

இதனிடையே பிரதமர் மோடி வாராணாசி தொகுதியிலும், அமித்ஷா காந்திநகர் தொகுதியிலும் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!