
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி மதுரையில் தொடங்கப்பட்டது. கட்சி தொடங்கப்பட்டு 2021ம் ஆண்டு சந்தித்த சட்டமன்ற தேர்தலில் எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்றாலும் கோவை உட்பட தமிழகத்தின் பல தொகுதிகளிலும் கணிசமான வாக்குகளை பெற்றிருந்தது.
மேலும் 27ம் தேதி நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி சடட்மன்ற இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் கட்சிக்கு ஆதராவக மக்கள் நீதி மய்யம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், கட்சி தொடங்கப்பட்டு நாளை 6ம் ஆண்டு விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கட்சி தொண்டர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில் “வருகின்ற 21ம் தேதி நம் கட்சியின் 6ம் ஆண்டு துவக்க விழாவை கொண்டாடும் விதமாக, கட்சி வளர்ச்சிப்பணியாற்ற கிராமங்களை நோக்கி நாம் செல்ல வேண்டும்.
மேட்டுப்பாளையத்தில் முதல் முறையாக தானமாக பெறப்பட்ட மனிதரின் தோல்
கட்சியினர் அனைவரும் மக்கள் நீதி மய்யம் கொடியை பிப்ரவரி 21ம் தேதி நகரங்களில் மட்டுமின்றி, அனைத்து கிராமங்களிலும் ஏற்ற வேண்டும். அழகான வெண் மேகக்சூட்டங்கள் போல, நம் மய்யக் கொடிகள் தமிழ்நாடு முழுவதும் பறக்க வழிவகுக்க வேண்டும்.
ஜெயலலிதா என்னை அச்சுறுத்திய போது எனக்கு துணையாக இருந்தவர் கருணாநிதி..! கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு
நம் கட்சி, நம் கொடி, என்ற உணர்வோடு மக்கள் நீதி மய்யத்தினர் அனைவரும் தங்கள் பகுதியில் மாற்ற கட்சியினர் கொடிகளை விட அதிகமான இடங்களில் நம் கொடி பறக்க விடுவதோடு, தங்கள் இல்லங்களிலும் கொடி ஏற்றி நம் கட்சியின் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாட கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.