வாக்களித்த மை காய்வதற்குள் ஈவிகேஎஸ் சென்னைக்கு ஓடி விடுவார்..! ஈரோடு மக்களை எச்சரிக்கும் அண்ணாமலை

By Ajmal Khan  |  First Published Feb 20, 2023, 9:24 AM IST

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசியவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். தனது கட்சியில் உள்ள பெண்களை இளங்கோவன் எப்படி நடத்துவார் என்பதை விஜயதாரணியிடம் கேளுங்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.


வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் திமுக

ஈரோடு இடைத்தேர்தல் வருகிற 27 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுக, காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என இரண்டு கட்சிகள் மட்டுமில்லாமல் அதன் கூட்டணி கட்சிகளும் தீவிரமாக களத்தில் வேலை செய்து வருகிறது. இந்தநிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து  அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய அவர்,  வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல்,  திமுக தேர்தல் வாக்குறுதியில் 1000 யூனிட் மின்சாரம் தருவதாக சொன்னார்கள். ஆனால் தற்போது 80 சதவீதம் மின் கட்டணம் உயர்ந்துள்ளது. தேர்தல் முடிந்தவுடன் 100 யூனிட் இலவசம் என சொல்கிறார். யாருக்கும் எதுவும் செய்யாமல் வாக்கை வாங்கி விடலாம் என நினைக்கிறார்கள் என தெரிவித்தார். 

Tap to resize

Latest Videos

ஆமை புகுந்த வீடும் பாஜக புகுந்த மாநிலமும் உருப்படாது.. சும்மா இறங்கி அடித்த ப.சிதம்பரம்..!

காவல்துறை கைகள் கட்டப்பட்டுள்ளது

27ம் தேர்தலுக்கு பிறகு தமிழ்நாட்டில் ஆட்சி மாற போவதில்லை. ஆனால் சட்டபேரவை தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்த வேண்டுமானால் அதிமுக இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும். தென்னரசு வெற்றி பெற்றால் முதலமைச்சருக்கு காது கேட்கும். அப்போது தான் திமுக தங்களது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என தெரிவித்தார்.  திமுக 22 மாத ஆட்சியில் தினமும் புது விதமான பிரச்சனைகளைதான் கொடுத்துள்ளனர். மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த எதுவும் செய்யவில்லை. 33 அமைச்சர்களும் மக்களை எப்படி அடைக்கலாம், எப்படி பொய் வாக்குறுதி கொடுக்கலாம் என யோசிக்கின்றனர். 30 ஆண்டுகாலமாக தலை நிமிர்ந்த இருந்த காவல்துறை தற்போது திமுக ஆட்சியில் கைகட்டப்பட்டுள்ளது.

தொடர் கொலை,கொள்ளை

தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருந்த நிலையில் 22 மாதத்தில் கூட்டு பலாத்காரம் நடத்து உள்ளன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் 9 கொலை நடந்து உள்ளன. காவல் துறைக்கு சவால் விட்டு கொலை நடைபெறுகிறது.  விடியல் தருவோம் என தெரிவித்து ஆட்சிக்கு வந்த திமுக தற்போது டாஸ்மாக் மூலம் பெண்களின் தாலியை கழற்றுகிறது என குற்றம்சாட்டினார். திருமங்கலம் பார்முலா , அரவக்குறிச்சி பார்முலா போல் ஈரோடு பார்முலா என கெட்ட பெயர் வாங்கிவிடாதீர்கள் என வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசியவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். தனது கட்சியில் உள்ள பெண்களை இளங்கோவன் எப்படி நடத்துவார் என்பதை விஜயதாரணியிடம் கேளுங்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு கே.எஸ். தென்னரசு அவர்களை ஆதரித்து, இடையாங்காட்டு வலசு, மகாஜன உயர்நிலைப்பள்ளி எதிரில், சூரம்பட்டி நால்ரோடு ஆகிய இடங்களில் இன்று அதிமுக, தாமக மற்றும் பாஜக தலைவர்கள் இணைந்து, (1/2) pic.twitter.com/k7TZEkCbl0

— K.Annamalai (@annamalai_k)

சென்னைக்கு ஓடி விடுவார்

இந்த தொகுதியில் தேர்தலின்போது வாக்காளர்  வைக்கும் மை காயும் முன்பே இளங்கோவன் சென்னைக்கு சென்று இருப்பார். திமுகவின் கூட்டணி தர்மம் சந்தி சிரிக்கிறது. இளங்கோவன் ஏழை மக்களுக்கானவர் அல்ல. தென்னரசு வெற்றி பெறும்போது திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை நிறைவேற்ற வைக்க முடியும் என தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலை நிறுத்த வேண்டும்.! திமுகவிற்கு எதிராக சீறும் பிரேமலதா விஜயகாந்த்

click me!