ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி 2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்ட என்னிடம் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி 1 கோடி ரூபாய் கேட்டார். பணம் கொடுப்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வேண்டாம் என்றும் கே.பி.முனுசாமி கூறியதாக தெரிவித்தார்.
திமுக ஆட்சியில், மின் கட்டணம், சொத்து வரி, விலைவாசி, கட்டுமானம் உள்ளிட்டவை பல மடங்கு உயர்ந்துள்ளதால் மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி 2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்ட என்னிடம் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி 1 கோடி ரூபாய் கேட்டார். பணம் கொடுப்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வேண்டாம் என்றும் கே.பி.முனுசாமி கூறியதாக தெரிவித்தார். என்னைப்போல் பலர் பணம் கொடுத்து கே.பி.முனுசாமியிடம் ஏமாந்துள்ளதாக தெரிவித்தார்.
undefined
இதையும் படிங்க;- 2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா மீண்டும் சிறைக்கு செல்வார்கள்.. ஆளுங்கட்சியை அலறவிடும் இபிஎஸ்..!
மேலும், அவர் பணம் சம்பாதிப்பதற்காகவே இபிஎஸ் அணியில் இருக்கிறார். கே.பி.முனுசாமிக்கு பதவி கொடுத்ததே ஓபிஎஸ் தான். சீசனுக்கு எற்றார் போல் வியாபாரம் செய்யும் கே.பி.முனுசாமி வாயை மூடவில்லை என்றால் அடுத்த இரண்டு நாட்களில் வீடியோ ரிலீஸ் செய்வேன் என்றும் ஓபிஎஸ் தொடர்பாக பேசினால் இனி நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என எச்சரித்தார். இந்த ஆடியோ விவகாரம் அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க;- தோல்வி பயத்தால் திமுக ரௌடிகள் தம்பிகள் மீது கொலைவெறி தாக்குதல்.. எரிமலையாய் வெடிக்கும் சீமான்
இதுதொடர்பாக ராஜேந்திர பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர்;- அரசியலில் கொடுக்கல், வாங்கல் சகஜம். இதையெல்லாம் ஆடியோவாக வெளியிடுவது அரசியல் நாகரீகம் கிடையாது. அந்த ஆடியோவில் தான் எம்.எல்.ஏ. சீட்டு வாங்கி தருவதாக ஒரு இடத்தில் கூட கே.பி.முனுசாமி கூறவில்லை. அந்த ஆடியோ உண்மையாக இருக்கலாம். அதில் இருக்கும் கருத்துக்கள் உண்மை இல்லை என ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
மேலும், திமுக ஆட்சியில், மின் கட்டணம், சொத்து வரி, விலைவாசி, கட்டுமானம் உள்ளிட்டை பல மடங்கு உயர்ந்துள்ளதால் மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். இதனால் ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் திமுக எதிரான மனநிலையில் தான் உள்ளனர். இது எம்.பி தேர்தலிலும் எதிரொலிக்கும் என தெரிவித்தார்.