ஆமை புகுந்த வீடும் பாஜக புகுந்த மாநிலமும் உருப்படாது.. சும்மா இறங்கி அடித்த ப.சிதம்பரம்..!

By vinoth kumar  |  First Published Feb 20, 2023, 6:52 AM IST

மக்கள் பிரதிநிதிகளால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது மட்டுமே ஆளுநருடைய பணி. ஆனால், மசோதாக்களை நிறைவேற்றாமல் தடுத்து நிறுத்தி ஜனநாயகத்துக்கு விரோதமான செயலில்தான் ஆளுநர் ஈடுபட்டு வருகிறார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த போக்கை ஒருநாளாவது அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி கண்டித்து பேசி இருப்பாரா?


எடப்பாடி பழனிசாமி தன்னை பரமசிவனின் கழுத்திலுள்ள பாம்பு என்று நினைத்துக்கொண்டிருக்கிறார். உண்மையில், அவர் கழுத்தில் பாஜக என்ற நச்சுப்பாம்பு சுற்றியிருக்கிறது என  ப.சிதம்பரம் கூறியுள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது, பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்;- தந்தை பெரியாருக்கு நாம் செய்யும் கைமாறாக ஈவிகேஎஸ் இளங்கோவனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். தேர்தல் பிரசாரத்தின்போது முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமி, திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டி வருகிறார். இபிஎஸ் மூன்றாம் தர பேச்சாளரைப்போல பேசுகிறார். தேர்தலின்போது அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஐந்து ஆண்டுக்காலம் இருக்கிறது.

Latest Videos

undefined

ஒரு புத்திசாலித்தனமான அரசு, உடனடியாக மக்களுக்கு எது தேவை, வளர்ச்சிக்கு எந்தெந்தத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வரிசைப்படுத்திதான் திட்டங்களை நிறைவேற்றும் என்றார். பாஜகவை எதிர்த்து அதிமுகவால் பேச முடியுமா என்றால் அவர்களால் பேச முடியாது. இது இன்று மட்டும் அல்ல, வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும்கூட பேச மாட்டார்கள். எடப்பாடி பழனிசாமி தன்னை பரமசிவனின் கழுத்திலுள்ள பாம்பு என்று நினைத்துக்கொண்டிருக்கிறார். உண்மையில், அவர் கழுத்தில் பாஜக என்ற நச்சுப்பாம்பு சுற்றியிருக்கிறது. ஆமை புகுந்த வீடும், அமீனா நுழைந்த வீடும் உருப்படாது என்ற பழமொழியுடன், பாஜக நுழைந்த மாநிலமும் உருப்படாது என்று சேர்த்துக்கொள்ளலாம்.

தற்போது பாஜக ஆட்சிபுரிந்து வரும் உத்தரப்பிரதேசம், பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த மக்கள்தான் பிழைப்புத் தேடி நம்முடைய தமிழகத்துக்கு வருகிறார்கள். வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும், பஞ்சமும் அங்கிருப்பதால்தான் பிழைப்பு தேடி இங்கே வருகிறார்கள். வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்ததில் மக்கள் ஆதரவு தங்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள இந்த இடைத்தேர்தல் களத்தில் அதிமுகவை பாஜக இறக்கியுள்ளது. இதனை அதிமுக உணரவில்லை. 

மக்கள் பிரதிநிதிகளால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது மட்டுமே ஆளுநருடைய பணி. ஆனால், மசோதாக்களை நிறைவேற்றாமல் தடுத்து நிறுத்தி ஜனநாயகத்துக்கு விரோதமான செயலில்தான் ஆளுநர் ஈடுபட்டு வருகிறார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த போக்கை ஒருநாளாவது அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி கண்டித்து பேசி இருப்பாரா? என  ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 
 

click me!