ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு நிகழ்ந்திருக்கும் 45 ஆவது தற்கொலை இதுவாகும். ஆன்லைன் சூதாட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் அனைவரின் கோரிக்கை ஆகும். - அன்புமணி ராமதாஸ் கேள்வி.
தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்குப் பலரும் அடிமையாகி வருகின்றனர். இதனால் பணத்தை இழந்து, தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. எனவே தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்களை தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.
இந்நிலையில், கோவை வெள்ளலூர் கருப்பராயன் கோவில் விதியை சேர்ந்த மதன் குமார் என்ற வாலிபர் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவருக்கு 25 வயது ஆகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலிசார் நடத்திய விசாரணையில் மதன் குமார் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் இழந்தாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க..BJP Protest : திமுகவை கண்டித்து சென்னையில் பாஜக போராட்டம்!.. அறிவித்தார் அண்ணாமலை - எப்போது தெரியுமா.?
வேலையில்லாத காரணத்தினாலும், கடன் பிரச்சனை அதிகமானதால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இதுகுறித்து ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த மோகன்குமார் என்ற பட்டதாரி ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் உடல்நல பாதிப்புகள் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்லைன் சூதாட்டம் எந்த அளவுக்கு மனிதகுலத்தை வேட்டையாடுகிறது என்பதற்கு இது தான் எடுத்துக்காட்டு. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு நிகழ்ந்திருக்கும் 45 ஆவது தற்கொலை இதுவாகும். ஆன்லைன் சூதாட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் அனைவரின் கோரிக்கை ஆகும்.
கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த மோகன்குமார் என்ற பட்டதாரி ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் உடல்நல பாதிப்புகள் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.(1/4)
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss)அதற்காக திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டு 125 நாட்களாகியும் அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுனர் மறுப்பது ஏற்க முடியாதது ஆகும். ஆன்லைன் சூதாட்டமும், அதற்கு அடிமையாகி இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கதையாவது அனுமதிக்க முடியாது. எனவே, ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு தமிழக ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்; அதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க..நான் பெரியாரின் பேரன்!.. மக்கள் நலனுக்கு இதுதான் சரி! கூட்டணி குறித்து ஈரோட்டில் விளக்கம் சொன்ன கமல்ஹாசன் !!