தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக எம்எல்ஏ அப்பாவு தேர்வு.. துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி தேர்வானார்.

By Ezhilarasan BabuFirst Published May 11, 2021, 12:47 PM IST
Highlights

சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மதியம் 12 மணியுடன் முடிவடைந்ததையடுத்து அந்த பதிகளுக்கு போட்டியிட யாரும் முன்வராததால் அப்பாவும் மற்றும் கு.பிச்சாண்டி ஆகியோர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். 
 

தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ராதாபுரம் திமுக எம்எல்ஏ அப்பாவு தேர்வு செய்யப்பட்டார். அதேபோல துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி தேர்வாகியுள்ளார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் பகல் 12 மணியுடன் நிறைவடைந்ததையடுத்து இவ்விருவரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இன்று கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்தார். அவரை அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை செயலாளர் ஆகியோர் வரவேற்றனர். 

பின்னர் முதலமைச்சர் அவர்கள் கலைவாணர் அரங்கில் உள்ள பேரவைத்தலைவர் அறைக்குச்சென்று தற்காலிக பேரவைத் தலைவர் திரு. கு பிச்சாண்டி அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வின்போது அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் முதல்வர் அவர்கள்  சட்டப் பேரவைச் செயலாளர் திரு கி. சீனிவாசன் அவர்களிடம் பேரவை தலைவர் பதவிக்கு போட்டியிடும் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ அப்பாவும் மற்றும் பேரவை துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் கீழ்பெண்ணாத்தூர் எம்.எல்.ஏக் கு.பிச்சாண்டி ஆகியோரது வேட்புமனுக்களை முன்மொழிந்தார்.

இந்த வேட்புமனுக்களை அவை முன்னவர் துரைமுருகன் வழிமொழிந்தார். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் அவை தலைவர் பதவிக்கு அப்பாவும் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு கு.பிச்சாண்டி ஆகியோர் தேர்வாகியுள்ளனர். அதாவது சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மதியம் 12 மணியுடன் முடிவடைந்ததையடுத்து அந்த பதிகளுக்கு போட்டியிட யாரும் முன்வராததால் அப்பாவும் மற்றும் கு.பிச்சாண்டி ஆகியோர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.  

 

click me!