சென்னை கொரோனா மருத்துவமனைகளில் 300 ஆக்சிஜன் செறியூட்டிகள்.. ககன்தீப் சிங் பேடி மருத்துவமனைகளில் நேரடி ஆய்வு.

By Ezhilarasan BabuFirst Published May 11, 2021, 12:18 PM IST
Highlights

ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கும் ஆக்சிஜன்  செறியூட்டிகள் மாநகராட்சியின் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு மருத்துவமனைகள் மற்றும்  கொரோனா சிகிச்சை  மையங்களுக்கு அளிக்கப்பட உள்ளது.

சென்னை மாநகராட்சியால் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட ஆக்சிஜன் செறியூட்டிகளின்  செயல்பாட்டினை முதன்மை  செயலாளர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆய்வு செய்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தவும், சிகிச்சை அளிக்கவும், பல்வேறு பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சைகள் தேவைப்படுவதால், ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கும் ஆக்சிஜன்  செறியூட்டிகள் மாநகராட்சியின் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு மருத்துவமனைகள் மற்றும்  கொரோனா சிகிச்சை  மையங்களுக்கு அளிக்கப்பட உள்ளது. 

தமிழக முதலமைச்சர் அவர்களிடம் OLAM International மற்றும் Temasek பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் 10-5-2021 இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு 300 ஆக்சிஜன் செறியூட்டிகளும் வழங்கினார்கள். தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 300 ஆக்சிஜன் செறியூட்டிகளை முதன்மைச் செயலாளர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், ககன்தீப் சிங் பேடி அவர்களிடம் வழங்கினார். இந்த ஆக்சிடெண்ட்  செறியூட்டிகளை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு உடனடியாக வழங்க முதன்மைச் செயலாளர் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி அவர்கள் உத்தரவிட்டார்கள். 

அதன்படி சென்னை ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு 50 ஆக்சிஜன் செறியூட்டிகளும், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு 33 ஆக்சிஜன் செறியூட்டிகளும் , கிங்ஸ் மருத்துவமனைக்கு 50 ஆக்சிஜன் செறியூட்டிகளும், தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனைக்கு 80 ஆக்சிடென்ட் செறியூட்டிகளும், சென்னை வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு 40 ஆக்சிஜன் செறியூட்டிகளும், கோடம்பாக்கம் மீனாட்சி பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு 40 ஆக்சிஜன் செறியூட்டிகள் என மொத்தம் 293 ஆக்சிடென்ட் செறியூட்டிகள் நேற்றைய தினம் வழங்கப்பட்டது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அவர்கள் சென்னை ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனைக்கு 10-5-2021 அன்று நேரடியாக சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டு மாநகராட்சியால் வழங்கப்பட்ட ஆக்ஸிஜன் செறியூட்டிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். அப்போது உடன் இருந்த மருத்துவர்களிடம் அதன் செயல்பாடு மற்றும் தொழில்நுட்ப விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார். 

 

click me!