எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யும் அதிமுக முக்கிய புள்ளி..!

Published : May 08, 2021, 10:28 AM IST
எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யும் அதிமுக முக்கிய புள்ளி..!

சுருக்கம்

சென்ட்ரல் மினிஸ்டரி விரிவாக்கம் வரும்போது அண்ணனுக்கு கண்டிப்பா பதவி வரும் என்றும் அளந்து கொண்டிருக்கிறார்கள் அவரது விசுவாசிகள். 

அதிமுகவில் ஓ.பிஎஸின் ஆதரவாளர்  கிருஷ்ணகிரியை சேர்ந்த முனுசாமி, வெற்றி பெற்றும் பலனில்லாமல் போனது. நாடாளுமன்றத் தேர்தலில் சீட்டு வாங்கி போட்டியிட்டவருக்கு தோல்வியே பரிசாக கிடைத்தது. இதனால் வம்படியாக மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வாங்கினார். பிறகு மாநில அரசியலில் அதிகாரம் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், சட்டமன்றத்துக்கு சீட்டு வாங்கி போட்டியிட்டார்.

ப வைட்டமினை தண்ணியாக இறைத்து வெற்றி பெற்றார். ஆனால் தேர்தல் முடிவுகள், மாநிலம் முழுவதும் அதிமுகவுக்கு சாதகமாக இல்லை. இதனால் விரக்தியான அவர் இப்போது மாநிலங்களவைக்கு போகலாமா? அல்லது மாநிலத்திலேயே இருக்கலாமா என்று தீவிர ஆலோசனையில் இருக்கிறார்.  மாநிலத்தில் ரூலிங் பார்ட்டியாக இருந்தால்தான் கெத்து. ஆனால் இப்போது அந்தநிலையில் அதிமுக இல்லை. அதனால் மாநிலத்தை விட, மாநிலங்கள் அவையைத்தான் அவர் விரும்புவதாக கூறுகிறார்கள். அது மட்டுமின்றி, சென்ட்ரல் மினிஸ்டரி விரிவாக்கம் வரும்போது அண்ணனுக்கு கண்டிப்பா பதவி வரும் என்றும் அளந்து கொண்டிருக்கிறார்கள் அவரது விசுவாசிகள். 
 

PREV
click me!

Recommended Stories

5.5 லட்சம் கோடி கடன்.. தமிழக மக்களை கடனாளியாக்கிய முதல்வர் ஸ்டாலின்.. இபிஎஸ் விமர்சனம்!
‘4-ல் 1கூட இல்லை.. ஸ்டாலின் சொல்லும் அத்தனையும் பச்சைப் பொய்..! எடப்பாடி பழனிசாமி சீற்றம்..!