
நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் பல கேள்விகள் தவறாக இருந்ததால் மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டதாகவும், தமிழ் மொழி மீது மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தவறான கேள்விகள் கேட்டுள்ளதாகவும் சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
நீட் தேர்வு ரத்து செய்வது பற்றி கவன ஈர்ப்பு தீர்மானத்தை சட்டப்பேரவையில் இன்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், விழுப்புரம் மாணவி பிரதீபா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். பெருவளூர் கிராமத்தை சேர்ந்த
கூலி தொழிலாளியின் மகள் பிரதீபா. இவர் பிளஸ் 2 தேர்வில் மாணவி பிரதீபா 1,125 மதிபெண்கள் எடுத்திருந்தார்.
ஏற்கனவே நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வருடம் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆண்டு மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டுள்ளா.
இந்த நிலையில், திமுக செயல் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், நீட் தேர்வு தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இனி எத்தனை உயிர்கள் நீட் தேர்வால் பலி ஆகப் போகிறதோ என்று அவர் அப்போது பேசினார்.
நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் பல கேள்விகளுக்கு தவறாக அச்சடிக்கப்பட்டிருந்ததால், மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டார். தமிழ் மொழி மீது மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தவறான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அனிதாவை இழந்தோம். இந்த ஆண்டு பிரதீபாவை இழந்துள்ளோம். நீட் தகுதி தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்குப் பெற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.