
சிறுவாணி குடிநீர்த் திட்டத்தின் மூலம் கோவை மாநகராட்சிக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்கிடவும், சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை 878.5 மீட்டர் வரை பராமரிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இந்த வேண்டுகோளுக்கிணங்க, கேரள அரசு, சிறுவாணி அணையிலிருந்து கோவை மாநகராட்சியின் குடிநீர் தேவையை தீர்க்க போதிய நீரை இன்றுஉடனடியாக திறந்துவிட்டுள்ளது. இதையடுத்து நேற்று கோரிக்கை வைக்கபட்ட நிலையில் இன்று நடவடிக்கை எடுத்த கேரள முதல்வரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, மு.க ஸ்டாலின் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நேற்று (19-6-2022) எழுதிய கடிதத்தில் சிறுவாணி குடிநீர்த் திட்டத்தின் மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் இத்திட்டப் பயனாளிகளுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்கிடவும், சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை 878.5 மீட்டர் வரை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும் கேட்டுக் கொண்டார்.
மேலும், கேரள முதலமைச்சர் இக்கோரிக்கை குறித்து தனிப்பட்ட முறையில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் கேரள அரசு, சிறுவாணி அணையிலிருந்து கோயம்புத்தூர் மாநகராட்சியன் குடிநீர் தேவையை தீர்க்க போதிய நீரை இன்று (20.6.2022) உடனடியாக திறந்துவிட்டுள்ளது. இதையடுத்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக நன்றி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : AIADMK : வருகிறது இடைத்தேர்தல்.. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுமா அதிமுக ? குழப்பத்தில் தொண்டர்கள்!
இதையும் படிங்க : 2024 தேர்தல்.. தமிழ்நாட்டுல இருந்து 25 எம்பிக்கள்.. இதுதான் டார்கெட்! திமுகவை அட்டாக் செய்யும் அண்ணாமலை