ஒற்றைத்தலைமைக்கு ஆதரவு பெருகி விட்டது.!இனி இ.பி.எஸ் நினைத்தாலும் தடுக்க முடியாது-ஓபிஎஸ்சை சீண்டிய வைகை செல்வன்

By Ajmal KhanFirst Published Jun 20, 2022, 5:08 PM IST
Highlights

எடப்பாடி பழனிசாமிக்குஆதரவு அதிகரித்து விட்டதாகவும் இதை ஓபிஎஸ் ஆதரிக்காமல் இருக்க முடியாது என முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.

ஒற்றை தலைமைக்கு பெருகிய ஆதரவு

அதிமுகவில் ஒற்றை தலைமை முழக்கம் எழுந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 60க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களும், 10க்கும் குறைவான மாவட்ட செயலாளர்கள் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். இந்தநிலையில் வருகிற 23 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. இதற்க்கு ஓ.பன்னீர் செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க  வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கடிதமும் எழுதியுள்ளார். மேலும் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனுவும் கொடுத்துள்ளார். இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் வானகரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்தை அதிமுக மூத்த நிர்வாகிகள் பார்வையிட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி,   கடந்த வாரம் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு கொரோனா  பாதிப்பின் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பொதுக்குழு நடைபெறுகிறது. இந்த பொதுக்குழவில் செயற்குழு மற்றும் பொதுக்குழு  மட்டும் அழைப்பு விடுத்தால் போதும் சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்க வேண்டாம் என கூறியிருந்தார் 

ஓபிஎஸ் ஆதரிக்காமல் இருக்க முடியாது

இப்போது இப்படி கூறுவது ஏன் என்று தெரியவில்லையென கூறினார். எதிர்க்கட்சியாக இருக்கின்ற இயக்கம் நாளை ஆளுங்கட்சியாக வருவதற்கு தயார்ப்படுத்திக் கொண்டுள்ள இந்த இயக்கம் ஒரு சில சந்தர்ப்பவாதிகள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த இயக்கத்திற்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக முயற்சி செய்கிறார்கள் காலம் அவர்களுக்கு சரியான தண்டனை வழங்கும் என தெரிவித்தார்.  ஓ பன்னீர்செல்வம் கட்சியில் நீண்ட காலமாக இருப்பவர் பல்வேறு பதவிகளை வகித்தவர் தற்போது அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்வார், தனது கருத்துகளை தெரிவிப்பார் பொதுக்குழு என்ன முடிவு எடுக்கிறதோ அதை ஒருங்கிணைப்பாளரும் ஏற்றுக்கொள்வார் இணை ஒருங்கிணைப்பாளர் ஏற்றுக்கொள்வார் என கூறியிருந்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது தங்களுக்கு உள்ள ஆதரவுகளை எடப்பாடி பழனிசாமி தரப்பு காட்டிக்கொள்ளும் வகையில் முன்னாள் அமைச்சர்கள் அதிமுக மூத்த நிர்வாகிகள் 90 % பேர் கலந்து கொண்டிருந்தனர். இதனை எடுத்துரைக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஒற்றைத்தலைமைக்கு ஆதரவு பெருகி விட்டது...! இனி, இ.பி.எஸ்  - நினைத்தாலும்  தடுக்க முடியாது...! அதை, ஓ.பி.எஸ் - ஆதரிக்காமல்  இருக்க முடியாது...! என அந்த பதிவில் ஓ.பன்னீர் செல்வத்தை சீண்டும் வகையில் தகவலை பகிர்ந்துள்ளார்.
 

இதையும் படியுங்கள்

திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு நடைபெறும்...!தீர்மானத்தை ஓபிஎஸ் ஏற்றுக்கொள்வார்- கே.பி.முனுசாமி அதிரடி

click me!