ஹிட்லருக்கு ஏற்பட்ட முடிவுதான் மோடிக்கும்.. காங்கிரஸ் தலைவர் ஆணவப் பேச்சு.

Published : Jun 20, 2022, 04:33 PM ISTUpdated : Jun 20, 2022, 05:41 PM IST
ஹிட்லருக்கு ஏற்பட்ட முடிவுதான் மோடிக்கும்.. காங்கிரஸ் தலைவர் ஆணவப் பேச்சு.

சுருக்கம்

ஹிட்லரின் பாதையை பின்பற்றும் பிரதமர் மோடி அவரைப்போலவே இறந்துவிடுவார் என முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான சுபோத் காந்த் சஹாய்  சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சை பலரும் கடுமையாக கண்டித்து வருகின்றனர்.  

ஹிட்லரின் பாதையை பின்பற்றும் பிரதமர் மோடி அவரைப்போலவே இறந்துவிடுவார் என முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான சுபோத் காந்த் சஹாய்  சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சை பலரும் கடுமையாக கண்டித்து வருகின்றனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக வடமாநிலங்களில் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இளைஞர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே கலவரங்கள் வெடித்து வருகிறது. நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, 30-க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. இதே நேரத்தில் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து டெல்லி ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் சுபோத் காந்த் சஹாய் மேடையில் சர்ச்சைக்குரிய வகையில் உரையாற்றினார். ராஞ்சியில் முன்னாள் எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சரும் ஆக இருந்தவர் சுபோத் காந்த் சஹாய் ஆவார்.

மேடையில் பேசிய அவர், மத்திய அரசின் இத்திட்டத்தை கடுமையாக விமர்சித்ததுடன், ஹிட்லரின் பாதையில் செயல்பட்டு வரும் பிரதமர் மோடி ஹிட்லரைப் போலவே இறந்துவிடுவார் என்றார். அவரின் பேச்சு அங்கிருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, அதற்கான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது,  பல அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கொடுத்துள்ள பேட்டியில், பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் அவமதித்து பேசியிருக்கிறார், இதுபோன்ற அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான மொழிகளை பயன்படுத்துவது காங்கிரஸின் டிஎன்ஏ வில் இருக்கிறது. பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது சட்டமன்ற தேர்தலின் போது, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அவரை  'மவுத் கா சவுதாகர்'  மரண வியாபாரி என்று பேசி இருந்தார்.அப்போது அது சர்ச்சையாக வெடித்தது. அவரின் இந்த பேச்சு அப்போது குஜராத் மக்களை புண்படுத்தியது, அதனால்தான் அத்தேர்தலில் பிரதமர் மோடி மகத்தான வெற்றியைப் பெற்றார். மக்கள் மோடியை மீண்டும் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுப்பதன் மூலம் காங்கிரஸ் விரக்தி நிலைக்கு சென்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தலைவர் அமித் மாளவியா, பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் சுபோத் காந்த் சஹாயின் இந்தக் கருத்து மிகவும் கீழ்த்தரமானது. கீழ்த்தரமான வார்த்தைகளில் காங்கிரஸார் பேசுவது இது முதல்முறை அல்ல. ஒட்டுமொத்தத்தில் காங்கிரஸ் விரக்தி அடைந்துள்ளது. மொத்தத்தில் காங்கிரஸ் கட்சி விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அவர்களால் முடிந்தது எல்லாம் பிரதமர் மோடியை இதுபோன்ற வார்த்தைகளால் விமர்சிப்பது மட்டும்தான். ஆனால் பிரதமர் மோடி நாட்டை சீர்திருத்துவதற்கான முக்கிய அரசியல் முடிவுகளை தொடர்ந்து எடுத்து வருகிறார்.

 

1962-ல் சீனாவுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு அக்னிபாத் திட்டம் உடனடியாக தேவைப்பட்டது. 1970, 80 களில் மீண்டும் முன்மொழியப்பட்டது. ஆனால் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கத்திற்கு இந்த சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கான மூலதனமோ, நோக்கமோ இல்லை, பிரதமர் மோடி இந்த சீர்திருத்தங்களை கொண்டு வருகிறார் அதனால் அவர்கள் இத்தகைய மொழிகளை பயன்படுத்துகிறார்கள் என விமர்சித்துள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!