
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24- ம் தேதியுடன் முடிவடைவதால், அடுத்த ஜனாதிபதி யார் என்று கேள்வி எழுந்துள்ளது. ஜூன் 29-ம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடையும் என்றும் வேட்பு மனுக்கள் வரும் 30ம் தேதியே சரிபார்க்கப்படும் என்றும் இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார். அதன்பின், ஜூலை 2-ம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள். அதன்பிறகு, போட்டியிருந்தால், ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 18-ம் தேதி நடைபெறும்.
தேர்தலில் பதிவான வாக்குகள் அடுத்த மாதம் 21-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இதையடுத்து, ஜுலை 25-ம் தேதி புதிய ஜனாதிபதி (அ) குடியரசுத் தலைவர் பதவியேற்பார் என்று தேர்தலை நடத்தும் இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.ஜனாதிபதியை நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களும் சேர்ந்த எலக்டோரல் காலேஜ் எனும் தேர்தல் குழு தான் தேர்ந்தெடுக்கும்.
இதையும் படிங்க : AIADMK : வருகிறது இடைத்தேர்தல்.. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுமா அதிமுக ? குழப்பத்தில் தொண்டர்கள்!
இந்த முறையும், அதே முறையில்தான் தேர்தல் நடைபெறவுள்ளது. நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களில் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, தற்போதைய நிலையில், 49 சதவீத வாக்குகள்தான் உள்ளன. எனவே, ஒருசதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற எதிர்க்கட்சிகள் அல்லது கூட்டணியில் இல்லாத கட்சிகளில் ஏதேனும் ஒன்றின் ஆதரவு மிக முக்கியம்.
பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தரப்போ யாரை வேட்பாளராக நிறுத்துவார்கள் என இதுவரை எந்த முன்னெடுப்பும் இல்லை. மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பமில்லை என்று இன்று கூறியுள்ளார். கேரளா கவர்னர் ஆரிப் முகமது கான், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் கவர்னர் திரவுபதி முர்மு மற்றும் 4 பேருடைய பெயர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க : 2024 தேர்தல்.. தமிழ்நாட்டுல இருந்து 25 எம்பிக்கள்.. இதுதான் டார்கெட்! திமுகவை அட்டாக் செய்யும் அண்ணாமலை