வேகமெடுக்கும் மு.க.ஸ்டாலின்... மக்களுக்கு போட்ட அன்பு கட்டளை..!

Published : May 08, 2021, 04:37 PM IST
வேகமெடுக்கும் மு.க.ஸ்டாலின்... மக்களுக்கு போட்ட அன்பு கட்டளை..!

சுருக்கம்

தமிழகத்தில் மக்கள் அனைவரும் இரண்டு வார முழு ஊரடங்கை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் மக்கள் அனைவரும் இரண்டு வார முழு ஊரடங்கை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுத்தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் கொரோனா தொற்று முதல் அலையை விட மிக மோசமாக தற்போது தொற்று பரவி வருகிறது. இதனால் இளைஞர்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. வேறு நோய்ப் பாதிப்பு இல்லாதவர்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு மிக மோசமான நிலைமையில் காணப்படுகின்றனர்.

பிற மாநிலங்களில் இருந்து வரக்கூடிய தகவல்கள் அச்சம் தரக்கூடிய அளவில் உள்ளது என்றும். மருத்துவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து செயல்பட்டு வருகின்றனர் என்றும் கூறியுள்ளார். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதில்,  தொற்று பரவலை தடுக்க முழு ஊரடங்கு அவசியம் என்று அவர்கள் கூறியதாகவும், மருத்துவ நிபுணர்களும் அதையே பரிந்துரை செய்தார்கள் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதனால் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. என்று தெரிவித்தார்.

மேலும் மக்கள் அனைவரும் கட்டுப்பாடாக இருந்தால் தொற்று நோய் பாதிப்பை கட்டுப்படுத்தலாம் என கூறியுள்ளார்.. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருங்கள். முககவசம் கட்டாயம் அணிய வேண்டும்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துங்கள் பழங்கள் காய்கறிகள் சாப்பிடுங்கள். அறிகுறி தெரிந்தால் உடனே மருத்துவரின் ஆலோசனையின் படி சிகிச்சை எடுங்கள். பயப்பட வேண்டாம். இது குணப்படுத்த கூடிய நோய்தான். இது சவாலான காலம் தான். அதே நேரத்தில் கடக்க முடியாத காலம் இல்லை என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் முழு உண்மையை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அந்த வகையில் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக நடவடிக்கைகள் இன்று முதல் வேகம் அடைந்துள்ளது. அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு மக்கள் அனைவரும் நடந்துகொள்ள வேண்டும் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடியோ பதிவில் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

திமுக ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் நடக்கிறது..! வெறுப்பில் அதிமுகவில் இணைந்த செங்கோட்டையன் அண்ணன் மகன்..!
இந்த திமுகவை நம்பாதீங்க..! மக்களை நம்ப வைச்சு ஏமாற்றுவதுதான் அவங்க வேலையே..! விஜய் எச்சரிக்கை..!