மத்திய அரசு மீது மு.க.ஸ்டாலினுக்கு சாப்ட்கார்னர்... கொளுத்தி போடும் ஜெயக்குமார்..!

By vinoth kumarFirst Published Sep 5, 2019, 3:17 PM IST
Highlights

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதுக்கு பிறகு மத்திய அரசை மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்ப்பதில்லை என்றும், மு.க.ஸ்டாலினின் குரல் மென்மையாகி விட்டதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதுக்கு பிறகு மத்திய அரசை மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்ப்பதில்லை என்றும், மு.க.ஸ்டாலினின் குரல் மென்மையாகி விட்டதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 

சென்னையில் வ.உ.சி.,யின் 148-வது பிறந்தநாள் விழாவில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் வ.உ.சி.க்கு மணிமண்டபம் அமைத்து அவரது புகழுக்கு மகுடம் சூட்டப்படும். சிதம்பரம் கைதுக்கு பிறகு மத்திய அரசு மீது மு.க.ஸ்டாலினுக்கு சாப்ட்கார்னர் வந்து விட்டது. அடுத்து கைது பயத்தில் இருப்பதால் இப்போது எல்லாம் மத்திய அரசை கடுமையாக விமர்சிப்பது இல்லை.

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தால் தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. மு.க.ஸ்டாலினை சி.பி.ராதாகிருஷ்ணன் புகழ்ந்தது பாஜகவின் கருத்தா என தெரியவில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

click me!