இதுதான் ச்சான்ஸ்னு புகுந்து விளையாடிய கட்கரி...!! வாகன ஓட்டிகளை மீண்டும் கடுப்பாக்கிய தரமான சம்பவம்...!!

By Asianet TamilFirst Published Sep 5, 2019, 2:59 PM IST
Highlights

அனைவரும் மோட்டார் வாகன விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே அதிக அபராதம் விதிக்கப்படுகிறது. அனைவரும் விதிகளை பின்பற்றி அபராதம் என்பதே  இல்லை என்ற நிலை வர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 

அனைவரும் மோட்டார் வாகன விதிகளை பின்பற்ற  வெண்டும் என்பதால்  அதிக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுசாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் அளித்துள்ளார். 

சாலை விபத்துக்களால்  நாட்டில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. இதற்கு காரணம் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றப்படாத தே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக்கி அதை அனைவரும் பின்பற்றும் வகையில் மத்திய அரசு, மோட்டார் வாகனச் சட்டம் என்ற பெயரில் புதிய போக்குவரத்து சட்டத்தை அமல் படுத்தியுள்ளது.அதில் அச்சட்டத்தின் போக்குவரத்து விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதுடன். அதற்கான அபராதத் தொகையும் உயர்ந்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது. பொதுவான அபராத தொகையாக இருந்த ரூபாய் 100 தற்போது புதிய சட்டத்தின் மூலம் அபராதமாக 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோன்று,போலீஸ் உத்தரவை மீறுதலுக்கு - ரூ .500 இலிருந்து ரூ.2000 ரூபாயாகவும், உரிமம் இன்றி வாகனம் ஓட்டுபவர்களுக்கு - ரூ 1,000 இலிருந்து ரூ.5,000 ரூபாயாகவும், தகுதி இல்லாத வாகனங்களை ஓட்டினால் - ரூ.500 லிருந்து ரூ.10,000 ரூபாய் வரையிலும், அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு  - ரூ.400 இலிருந்து ரூ.2000 ரூபாயாகவும், ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டினால் - ரூ 1000 இலிருந்து ரூ. 5000 ஆகவும், மது போதையில் வாகனம் ஓட்டினால் - ரூ  2,000 இலிருந்து ரூ.10,000 ரூபாயாகவும்,  ரேஸில் ஈடுபடுபவர்களுக்கு -  ரூ 500 - லிருந்து ரூ 5000 ஆகவும். பர்மிட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் - ரூ. 5000 லிருந்து  ரூ.10,000 ஆகவும் ,அதிக பாரம் ஏற்றிச்சென்றால் - ரூ.2000 இலிருந்து  ரூ.20,000 ரூபாயாகவும்,  அபராதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய மோட்டார் வாகனச்சட்டப்படி பன்மடங்காக 

உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையை மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த புதிய கட்டணம் குறித்து டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, அனைவரும் மோட்டார் வாகன விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே அதிக அபராதம் விதிக்கப்படுகிறது. அனைவரும் விதிகளை பின்பற்றி அபராதம் என்பதே  இல்லை என்ற நிலை வர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 

click me!