மக்களை ஏமாற்றும் மு.க.ஸ்டாலின்... இதெல்லாம் நடக்கிற காரியமா..? ஃப்ளாஷ் பேக் கூறும் எல்.முருகன்..!

Published : Mar 08, 2021, 04:48 PM IST
மக்களை ஏமாற்றும் மு.க.ஸ்டாலின்... இதெல்லாம் நடக்கிற காரியமா..? ஃப்ளாஷ் பேக் கூறும் எல்.முருகன்..!

சுருக்கம்

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 தரப்படும் என்பதை ஸ்டாலின் எப்படி நிறைவேற்றுவார்? ஏமாற்றுவதற்கு திமுகவிடம் இருந்துதான் நாம் கற்றுக்கொள்ள வேண்டு

குடும்பத்திற்கு 2 ஏக்கர் நிலம் தருவதாக கூறி ஆட்சிக்கு வந்த கருணாநிதி மக்களை ஏமாற்றினார். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 தரப்படும் என்பதை ஸ்டாலின் எப்படி நிறைவேற்றுவார்? என பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் கேள்வி எழுப்பினார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழகத்தின் பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்பு, சமூக நீதி ஆகிய துறைகளை மேம்படுத்த ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள் என்ற தலைப்பில், அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்களையும் வெளியிட்டார்.

திமுகவின் இந்த அறிவிப்பு மற்றும் செயல்திட்டங்கள் ஏமாற்று வேலை என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறினார். இதுகுறித்து அவர், ’’மத்திய அரசின் திட்டங்களை மிஷன்-7 என் ஸ்டாலின் கூறி வருகிறார். திமுக அறிவித்த எழில்மிகு மாநகர் திட்டம் ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டமாக உள்ளது. விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் தரப்படும் என திமுக இதற்கு முன்னர் கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது? குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 தரப்படும் என்பதை ஸ்டாலின் எப்படி நிறைவேற்றுவார்? ஏமாற்றுவதற்கு திமுகவிடம் இருந்துதான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்’’ என அவர் தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!
தந்தை தரப்பை கதறவிடும் அன்புமணி.. 14ம் தேதி முதல் பாமகவில் விருப்பமனு விநியோகம்..