பதவி வெறி பிடித்த ஸ்டாலினுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்... வெளுத்து வாங்கிய எஸ்.பி.வேலுமணி...காரணம் இதுதான்

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 08, 2021, 04:25 PM IST
பதவி வெறி பிடித்த ஸ்டாலினுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்... வெளுத்து வாங்கிய எஸ்.பி.வேலுமணி...காரணம் இதுதான்

சுருக்கம்

தற்போது உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஸ்டாலினின் பொய் பிரச்சாரத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார். 

ஏப்ரல் 6ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எனவே அரசியல் கட்சியினர் தீவிர பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி சிறுகனூரில் தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் என்ற தலைப்பில் திமுக பிரம்மாண்ட மாநாடு நேற்று நடந்தது. இதில் லட்சக்கணக்கான திமுகவினர் கலந்து கொண்டனர். 

இந்த பொதுக்கூட்டத்திற்காக கட் அவுட்கள், திமுக கொடி என திருச்சி மாநகரம் களைகட்டியது. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின், அடுத்த 10 ஆண்டுகளில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி  ஏற்படும் .ஆண்டுக்கு 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வேலையில்லாத் திண்டாட்டம் சரிபாதியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் பொருட்கள் வாங்கும் அனைத்து குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். 


இந்நிலையில் என்னுடைய தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் காப்பியடித்துவிட்டதாக கமல் ஹாசன் குற்றச்சாட்டியுள்ளார். நான் குடும்ப தலைவிகளுக்காக அறிவித்த திட்டங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அப்படியே மீண்டும் தன்னுடைய திட்டம் போல் சொல்லி வருகிறார். என்னுடைய கட்சி சார்பில் ‘நாமே தீர்வு’என்ற தலைப்பில் பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. அதையே ஸ்டாலின் ‘ஒன்றிணைவோம் வா’என்று மாற்றி பரப்புரை மேற்கொண்டு வருகிறார்’. ஏதோ நாங்கள் எழுதிக்கொடுத்ததை பேசுவது போல் அவர் பிரச்சாரங்களில் நடந்து கொள்கிறார் என கடுமையாக சாடினார். 

தற்போது உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஸ்டாலினின் பொய் பிரச்சாரத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார். மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் திட்டத்திற்கு மாற்று திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்த திமுக தலைவர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை முழுவதுமாக ஒழிக்க மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு அதற்கான நவீனத் திட்டத்தையும் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாதவாறு பல்வேறு கட்டங்களாக தமிழகம் முழுவதும் செயல்படுத்தி வந்துள்ளதுள்ளது”.

‘எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என கண்கொத்தி பாம்பாய் அலைந்து கொண்டிருக்கும் அவர், அதிமுக ஆட்சியில் செய்த மக்கள் நலத்திட்டங்களை கூட தெரிந்து கொள்ளவில்லை என்பதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை’ என்றும், ‘மக்களைப் பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமல் முதலமைச்சர் பதவியை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு பதவி வெறி பிடித்து இருக்கும் அவருக்கு இம்முறையும் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். 


 

PREV
click me!

Recommended Stories

Trisha Krishnan: த்ரிஷா புகழ்பாடும் கோலிவுட்..! "சரோஜா தேவி மாதிரி நல்ல கேரக்டர்"..! சர்ட்டிஃபிகேட் கொடுக்கும் நடிகர்கள்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!