சென்னை உயர்நீதிமன்றத்தில் கொரோனா உள்ளதா இல்லையா.? தலைமை செயலக முற்றுகை போராட்டம் அறிவித்த வழக்கறிஞர்கள்.

By Ezhilarasan BabuFirst Published Mar 8, 2021, 4:01 PM IST
Highlights

சென்னை உயர்நீதிமன்றத்தில் கொரனோ உள்ளதா இல்லையா என்ற அறிக்கையை வெளியிடக்கோரி புதன் கிழமை வழக்கறிஞர்கள் தலைமை செயலக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளனர். 

சென்னை உயர்நீதிமன்றத்தில் கொரனோ உள்ளதா இல்லையா என்ற அறிக்கையை வெளியிடக்கோரி புதன் கிழமை வழக்கறிஞர்கள் தலைமை செயலக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளனர். வழக்கறிஞர் அறைகள் மூடப்படும் என்ற சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பை எதிர்த்து  வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டதில் சுமார் 100ற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.  

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம்  பேசிய வழக்கறிஞர்கள், கொரனோ தொற்று காரணமாக 300 நாட்களாக நீதிமன்றம் செயல்படாமல் வழக்குகள் காணொளி மூலமாக செயல்பட்டு வந்தது. இதனால் வழக்கறிஞர்களும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உடமைகள் எல்லாம் வழக்கறிஞர்கள் அறைக்குள் இருப்பதாகவும், ஆனால் பதிவாளர் வெளியிட்ட வழக்கறிஞர்கள் அறை மூடபடும் என வெளியிட்ட அறிக்கையானது எதன் அடிப்படையில் வெளியிடபட்டது என்று தெரியவில்லை எனவும், தமிழகத்தில் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகள், திரையரங்குகள் மற்றும் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. ஆனால் வழக்கறிஞர்கள் அறைகள் மூடப்படுவதை கடுமையாக எதிர்க்கிறோம் என்றனர்.  

வழக்கறிஞர் அறைகளை உடனடியாக  திறக்கப்பட வேண்டும் எனவும், நீதிமன்றங்கள் வழக்கம்போல் செயல்பட வேண்டும் என்றார். எங்களுடைய கோரிக்கைகளை ஏற்காவிடில் வருகின்ற புதன்கிழமை தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம், எனவும், ஏனென்றால் உயர்நீதிமன்றத்தில் கொரனோ தொற்று உள்ளதா இல்லையா என்ற உண்மையான அறிக்கையை சுகாதார துறை செயலாளர் அறிவிக்கவேண்டும் என்றனர்.  

click me!