முதல்வர் உள்பட அனைவரும் சிறைக்கு செல்வது உறுதி - எச்.ராஜா பேச்சு

By Velmurugan sFirst Published Jul 14, 2023, 2:12 PM IST
Highlights

சகோதரி துர்கா ஸ்டாலின் தவிர தமிழக முதல்வர் உள்பட அனைவரும் சிறைக்குச் செல்வார்கள் -  பிஜேபி மூத்த தலைவர் எச் ராஜா பேச்சு.

பாஜக 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அருகே நடைபெற்றது.  இதில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், ஒரு நாட்டை எப்படி நடத்த வேண்டும் என்று தெரிந்தவர் பாரத பிரதமர். தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் பெண்களின் மானத்தை காப்பாற்றுவதற்காக  12 கோடி வீடுகளுக்கு கழிவறை கட்டிக் கொடுத்துள்ளோம். 

தமிழ்நாடை கொள்ளை அடித்தவர்கள் இனிமேல் கொள்ளை அடிக்கக் கூடாது. இது திராவிட மாடல் ஆட்சி இல்லை. ரௌடியின் மாடல் ஆட்சி. மக்களைப் பற்றி காங்கிரஸ்க்கு கவலை கிடையாது. மக்கள் மருந்தகத்தின் பெயர் பாஜக மருந்தகம். ஏனென்றால் அது பாஜகவின் திட்டம். அமெரிக்காவைப் போன்று 3 மடங்கும், இங்கிலாந்து 8 மடங்கு கொரோனா களத்தில் மாதம் 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு வழங்கிய ஆட்சி பாரத பிரதமர் ஆட்சி. 

நாமக்கலில் 250 ஆடுகள், 2500 நாட்டு கோழிகள என 20 ஆயிரம் பேருக்கு பரிமாறப்பட்ட கறி விருந்து

அமைச்சர் செந்தில் பாலாஜி 38 நாட்களாக என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்பது மேகலாவிற்கு கூட தெரியாது. பாஜக எங்கெங்கு வேட்பாளரை நிறுத்துகிறதோ அங்கெல்லாம் ஓட்டு கேட்க வருவேன். எனக்கென்று ஓட்டு கேட்க மாட்டேன். பல்வேறு விஷயத்தில் மக்களை திசை திருப்பும் வேலையில் திமுக ஈடுபடுகிறது. சர்வதேச அளவில் மிகப்பெரிய ஆளுமையாக இருப்பது பாரதிய ஜனதா கட்சி தான். 

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேச மாட்டேன் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, நேருவிடம் எழுதி வாங்க வேண்டும். புதிய டிஜிபி வந்திருக்கிறார். மாற்றம் வரும் என நினைத்தேன். ஏமாந்து போனேன். சகோதரி துர்கா ஸ்டாலின் தவிர, தமிழக முதல்வர் உள்பட அனைவரும் சிறைக்குச் செல்வார்கள். 2024ல் நாடாளுமன்ற தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும் ஒன்றாக வரும் என்றார்.

உரிமைத்தொகை திட்டத்திற்கு தகுதியானவர்களை அடையாளம் காணும் முகாம் 24 முதல் தொடக்கம் - மேயர் பிரியா தகவல்

மேலும் செய்தியாளர்களிடம் எச்.ராஜா பேசுகையில், தமிழகத்தில் மாநில உரிமை முழு கொள்ளைகார அரசாங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை நடைபெற்ற சோதனையில் 19 ஆயிரம் கோடி ஆவணங்களும், பணங்களும் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. 1 லட்சம் கோடி ரூபாய் மதுபான கடைகளால் மட்டும் கொள்ளையடித்து இருப்பது மாநில உரிமையா? அது மட்டும் இல்லை எங்கே தனது நிதி அமைச்சராக இருந்த பி டி ஆர் தியாகராஜன் சொன்னது 30 ஆயிரம் கோடி அந்த குடும்பமே எடுத்து இருக்கிறது. கருப்பு வெள்ளை ஆக்குவதற்கு தடுமாறிக் கொண்டிருக்கிறது. செந்தில் பாலாஜி கஸ்டடியில் எடுத்தால் தாம் சிறைக்கு செல்ல வேண்டும் என்பதால் செயல்பட்டு கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர். பெரிய நாடகமானது ஒரு ஊழல் சர்க்கார் நடத்திக் கொண்டிருக்கிறது.

பொது சிவில் சட்டம் என்பது அனைவருக்கும் ஒரே சட்டம். மக்களை ஏமாற்றுகின்ற ஒரு மோசடி பேச்சு என்றும், ஒரு வீட்டில் இரண்டு சட்டம் இருக்க முடியாது. மத்திய அரசினுடைய வழிகாட்டுதலின்படி ஆளுநர் அவர்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறார். இரண்டு வருடத்தில் கஞ்சா போதையில் வழிப்பறி, திருட்டு அதிகரித்து உள்ளது. இது தமிழ்நாடா கஞ்சா நாடா என்று தெரியாத அளவுக்கு அதிகரித்துக் கொண்டு வருகிறது என்றார்.

click me!