திமுக ஆட்சி மீது பகீர்... தவறான வழியில் சிறுபான்மை இளைஞர்கள்... வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு..!

Published : Aug 14, 2021, 02:47 PM IST
திமுக ஆட்சி மீது பகீர்... தவறான வழியில் சிறுபான்மை இளைஞர்கள்... வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு..!

சுருக்கம்

தி.மு.க., ஆட்சியில் இஸ்லாமிய மக்களிடத்தில் பா.ஜ.க., வை கொண்டு செல்லும் நிர்வாகிகளுக்கு முழுமையான பாதுகாப்பு தரப்படவில்லை.

தி.மு.க., ஆட்சியில் தான் அடிப்படைவாத சக்திகள் பலம் பெறுகிறார்கள். அவர்கள் இளைஞர்களை தவறான வழிகளில் ஊக்கப்படுத்துகின்றனர் என பா.ஜ.க., சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் தெரிவித்தார்.

திருப்பரங்குன்றத்தில் நடந்த மத நல்லிணக்க கலந்துரையாடலில் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் இப்ராஹிம் பேசினார். அப்போது, ’’இந்தியா முழுவதும், இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் பா.ஜ.க., வில் அதிகளவில் இணைந்து வருகிறார்கள். இதை பொறுத்துக் கொள்ள இயலாத பயங்கரவாத, பிரிவினைவாத சக்திகளும், தேச விரோத கட்சிகளும் தொடர்ந்து சிறுபான்மையினரை அச்சுறுத்தி வருகின்றனர். தமிழகத்திலும் இந்த நிலை தொடர்கிறது. 

தி.மு.க., ஆட்சியில் இஸ்லாமிய மக்களிடத்தில் பா.ஜ.க., வை கொண்டு செல்லும் நிர்வாகிகளுக்கு முழுமையான பாதுகாப்பு தரப்படவில்லை. எங்களை போன்று அச்சுறுத்தலை சந்திக்கக்கூடியவர்கள் மதுரைக்கு வரும்போது முறையான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படாதது மட்டுமல்ல. இஸ்லாமியப் பகுதிகளில் நாங்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது.

சிறுபான்மை மக்கள் தாக்கப்படுவது தி.மு.க., ஆட்சியில்தான் என உறுதியாக கூற முடியும். தி.மு.க., ஆட்சியில் தான் அடிப்படைவாத சக்திகள் பலம் பெறுகிறார்கள். அவர்கள் இளைஞர்களை தவறான வழிகளில் ஊக்கப்படுத்துகின்றனர். இதனை முதலில் நிறுத்த வேண்டும்’’என அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!