பணப்பட்டுவாடா செய்த அமைச்சர்கள் - ஓட ஓட விரட்டியடித்த ஆர்.கே.நகர் பொதுமக்கள்....

Asianet News Tamil  
Published : Mar 26, 2017, 09:24 PM ISTUpdated : Sep 19, 2018, 03:04 AM IST
பணப்பட்டுவாடா செய்த அமைச்சர்கள் - ஓட ஓட விரட்டியடித்த ஆர்.கே.நகர் பொதுமக்கள்....

சுருக்கம்

Ministers made the payment - to run away chased arkenakar public

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடா செய்த அமைச்சர்களை அப்பகுதி மக்களே பிடித்து ஓட ஓட விரட்டியடித்தனர். மேலும் இதுகுறித்து தெரிந்தும் தேர்தல் அதிகாரியும் போலீசாரும் நடவடிக்கை எடுக்க வில்லை என குற்றம் சாட்டினர்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சசிகலா தரப்பில் டி.டி.வி தினகரனும், ஒ.பி.எஸ் தரப்பில் மதுசூதனனும் ஆர்.கே.நகரில் போட்டியிடுகின்றனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் சசிகலா தரப்பினர் பணபட்டுவாடா செய்வதாக ஒ.பி.எஸ் தரப்பினர் குற்றம் சாட்டினர். அதைதொடர்ந்து அப்பகுதியில் கண்காணிப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

இந்நிலையில், ஆர்.கே.நகரில் உள்ள தேனீ அம்மன் கோவிலில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தலைக்கு 4 ஆயிரம்ரூபாய்  பணபட்டுவாடா செய்துள்ளனர்.

அப்போது பொதுமக்கள் அவர்களை பிடித்து கேள்வி கேட்டனர். இதனால் அமைச்சர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடினர். அங்கு வந்த தேர்தல் அதிகாரி இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளததால் அப்பகுதி மக்கள் தண்டையார் பேட்டை போலீசாரிடம் புகார் அளித்தனர்.

ஆனால் போலீசாரும் அமைச்சர்கள் என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் தேர்தல் ஆணையம் என்பது எதற்கு? யாருக்காக செயல்படுகிறது? பொதுமக்கள் பிடித்து கொடுத்தும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

எது எப்படியோ இந்த சம்பவம் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்பதை மட்டும் தெளிவாக விளக்குகிறது.

 

PREV
click me!

Recommended Stories

விஜய் போட்ட மெகா ப்ளான்..! தவெகவில் கூட்டணியில் இணையும் மெகா அணிகள்..! சூடு பறக்கும் அரசியல் களம்..!
மதுரோவை கைது செய்ய ரூ.1,11,00,00,00,000 கோடி செலவிட்ட அமெரிக்கா.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய டிரம்ப்..!