
தீபாவின் கணவர் மாதவன் சில நாட்காளாக தீபாவிற்கு எதிராக பல்வேறு முரண்பட்ட கருத்துகளை தெரிவித்து வந்தார். இதுகுறித்து தீபாவிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பிய போது தேவையற்ற பேச்சுக்கெல்லாம் எனக்கு நேரம் போதாது என நேரலையில் இருந்து பாதியிலேயே சென்று விட்டார்.
ஜெயலலிதாவின் மறைவின்போது அவரது அண்ணன் மகள் தீபா சசிகலாவிற்கு எதிராக பல குற்றசாட்டுகளை முன்வைத்து வந்தார். இதனால் அதிமுக அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் தீபாவின் ஆதரவு பெருகியது.
இதையடுத்து தொண்டர்கள் தீபா அரசியலுக்கு வரவேண்டும், ஆட்சியை ஏற்று நடத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை தீபாவிடம் முன்வைத்து வந்தனர்.
ஆனால் அதற்கு தீபா பதிலளிக்காமல் அலட்சியம் காட்டி வந்தார். இதையடுத்து சசிகலாவுடன் இருந்த ஒ.பி.எஸ் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்க ஆரம்பித்தார்.
பின்னர், ஒ.பி.எஸ்சுடன் தீபா இணைவார் என்று பலராலும் பேசப்பட்டது. ஆனால் தொண்டர்கள் தனித்து இயங்க ஆசைபடுகிறார்கள், எனவே தனி பேரவையை உருவாக்குறேன் என கூறி எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை உருவாக்கினார்.
மேலும் ஆர்.கே.நகரில் போட்டியிடுவேன் எனவும் அறிவித்தார். இதைதொடர்ந்து பேரவையில் பல்வேறு கட்ட குழப்பங்கள் நிலவின. நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதில் தீபாவிற்கும் அவரது கணவர் மாதவனுக்கும் கருத்து வேறுபாடு நிலவியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாதவன் திடீரென ஒருநாள் ஜெயலலிதாவின் சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு புது கட்சி தொடங்க போகிறேன் என பேட்டி அளித்தார். மேலும் தீபா பேரவையில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.
பின்னர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக மனுதாக்கல் செய்ய வந்த தீபா கணவருக்கான கட்டத்தில் பெயர் குறிப்பிடாமல் இருந்தார்.
அதனால் சிலமணி நேர தாமதத்திற்கு பிறகே தீபாவின் மனு ஏற்றுகொள்ளப்பட்டது. இதற்கு தீபாவின் பதற்றமே காரணம் எனவும் அவரது கணவர் மாதவன் வேடிக்கையாக பதிலளித்தார்.
அப்போதும் தீபா சசிகலா மீதே புகார் வைத்தார். இதைகேட்ட தொகுப்பாளர், உங்கள் குடும்ப பிரச்சனையில் சசிகலா திடீரென எங்கிருந்து வந்தார் என கேள்வி எழுப்பினார்.
இதனால் கோபமடைந்த தீபா தேவையற்ற பேச்சிற்கெல்லாம் எனக்கு நேரம் பற்றாது என நேரலையில் இருந்து சென்று விட்டார்.