அமைச்சரவை அறிவிப்பு - செங்கோட்டையனுக்கு பள்ளிகல்வித்துறை.. செந்தில் பாலாஜிக்கு ஏமாற்றம்

 
Published : Feb 16, 2017, 03:49 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
அமைச்சரவை  அறிவிப்பு - செங்கோட்டையனுக்கு பள்ளிகல்வித்துறை.. செந்தில் பாலாஜிக்கு ஏமாற்றம்

சுருக்கம்

இன்று மாலை எடப்பாடி உடன் பழைய அமைச்சரவை அப்படியே பொறுப்பேற்கிறது புதிதாக செங்கோட்டையன் மட்டுமே அமைச்சராகிறார்.

பெரிதும் எதிர்பார்க்கபட்ட தங்கத்தமிழ்ச்செல்வன் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

அதிமுகவின் கடந்த 5அம தேதி சசிகலா புதிய சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டவுடன் ஓபிஎஸ் போர்க்கொடி தூக்க இரண்டாக அதிமுக பிரிந்து பின்னர் சசிகலா சிறைக்கு சென்றதால் சசிகலா தரப்பில் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை ஆளுநரின் அறிவிப்பின் பேரில் இன்று மாலை பதவியேற்கிறது.

இதில் இரண்டே இரண்டு மாற்றங்கள் தவிர பழைய அமைச்சரவை அப்படியே தொடர்கிறது.

முதலமைச்சராக ஓபிஎஸ் இருந்த இடத்தில அதே பொறுப்புகளுடன் எடப்பாடி முதல்வர் ஆகிறார்.

கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் இடத்தில் செங்கோட்டையன் பள்ளிகல்வித்துறை அமைச்சராகிறார்.

கூடுதலாக எந்த மாற்றமும் செய்யாமல் அதே அமைச்சரவை தொடர்கிறது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓபிஎஸ்சுக்கு சவாலாக தேனி மாவட்டத்தில் களமிறங்கிய தங்கதமிழ் செல்வனுக்கும் கடந்த 10 நாட்களாக பல்வேறு நிகழ்வுகளுக்கு பின்புலமாக இருந்த செந்தில் பாலாஜிக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அவர்களுக்கு எந்த ஒரு அமைச்சர் பதவியும் வழங்கப்படவில்லை

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!