புதிய அமைச்சரவை பட்டியல் ரெடி - மாலை 4 மணிக்கு பதவி ஏற்பு

 
Published : Feb 16, 2017, 02:46 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
புதிய அமைச்சரவை பட்டியல் ரெடி - மாலை 4 மணிக்கு பதவி ஏற்பு

சுருக்கம்

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டதால் சசிகலா முதலமைச்சராக பதவியேற்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கடிதத்தை வழங்கி ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இதேபோல், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், தங்கள் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சிலர் அடைத்து வைக்கபட்டிருப்பதாக கூறியதால் குழப்பம் நீடித்தது.

கவர்னர் தரப்பிலிருந்து எந்த அழைப்பும் விடுக்காததால், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கவர்னருக்கு நினைவூட்டல் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

பின்னர் இரவு சுமார் 7.30 மணியளவில் அமைச்சர்களுடன் சென்று கவர்னரை சந்தித்து, ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கும்படி கூறினார்.

இதைதொடர்ந்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். இந்நிலையில் இன்று அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

அதன்படி அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் இன்று காலை ஆளுநரை சந்தித்தார் எடப்பாடி பழனிச்சாமி. எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க வரும்படி ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சந்திப்பை முடிந்த நிலையில், தற்போது மீண்டும் எடப்பாடி ஆளுனரை சந்தித்து புதிய அமைசச்சரவை பட்டியலை வழங்கினார். அதில் பெரும்பான்மையான அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றபடாது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஓ.பி.எஸ் நிதித்துறையையும் பாண்டியராஜன் கல்வித்துறையையும் கவனித்து வந்தனர். தற்போது அந்த பதவி யாருக்கு போகும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இன்று மாலை 4 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் மாளிகையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். அப்போது புதிய அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களும் பதவியேற்கலாம் என தெரிவித்தார்.

கடந்த 10 நாட்களாக நிலவிய இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

வெண்டிலேட்டரில் இருக்கும் காங்கிரஸுக்கும் இந்தியா கூட்டணிக்கும் தொடர்பில்லை: உமர் அப்துல்லா அதிரடி
அமித்ஷாவுடன் பேசியது என்ன? பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி? நயினார் நாகேந்திரன் விளக்கம்!