
எடப்பாடி பழனிசாமி..கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முக்கியமான அதிமுக அமைச்சர். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அவரது அமைச்சரவையில் இருந்த ஐவர் அணியில் இருந்தவர் பழனிசாமி.
சேலம் மாவட்டம் சிலுவைப்பாளையத்தில் 1954 ஆம் ஆண்டு பிறந்தவர் எடப்பாடி பழனிசாமி.
தனது 18 ஆவது வயதில் சிலுவைப்பாளையம் கிளைக்கழக அதிமுக செயலாளராக பதவியேற்று பணியாற்றியவர் பழனிசாமி.
1982 ஆம் ஆண்டு எடப்பாடி ஒன்றிய கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
1989 ஆம் ஆண்டு எடப்பாடி தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1991 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் அதிமுக சார்பில் வெற்றிபெற்றார்.
2011 மற்றும் 2016 ஆண்டுகளில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக பணியாற்றினார்.
திருச்சேங்கோடு தொகுதி நாடாளுமன்றத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி.ஆகவும் பணியாற்றினார்.
1996 மற்றும் 2006 ல் அதே எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு பழனிசாமி தோல்வியடைந்தார்.
2011 தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் அதிமுக வுக்காக பெற்றுத் தந்தவர்.
இந்நிலையில் இன்று தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க உள்ளார்.