
எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ள நிலையில் ஓபிஎஸ் தரப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு இல்லமான தென்பென்னையில் ஆயிரகணக்கான ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூடியுள்ளனர்.
அவர்கள் முன்பாக பேசிய ஓபிஎஸ்,
"ஒரு குடும்பத்தின் பிடியிலிருந்து அதிமுக என்ற கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றுவோம்.. இது ஒரு தர்ம யுத்தத்தின் திடக்கம்.. இதில் வெற்றி கிடைக்கும் வரை இந்த தர்ம யுத்தம் தொடரும்" என ஓபிஎஸ் தெரிவித்தார்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பை முடித்தக பிறகு காரில் ஏறி ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் வெளியே கிளம்பி விட்டனர்.
மக்கள் விரும்பும் ஆட்சி அமையும் வரை இந்தப் போராட்டம் தொடரும் எனவும் உலகம் முழுவதும் தமக்கு ஆதரவளித்த தமிழர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஒபிஎஸ் தெரிவித்தார்.
முதல்வர் ஓபிஎஸ்சுடன் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் உடனிருந்தனர்.