என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க..? மரியாதையே இல்ல... முதல்வர் ஸ்டாலின் முன் கொந்தளித்த மூத்த அமைச்சர்

By manimegalai aFirst Published Jan 9, 2022, 7:56 AM IST
Highlights

முதல்வருக்கு கொஞ்சம் கூட மரியாதை இல்லாம திமுக எம்எல்ஏக்கள் நடந்து கொண்டு வருகின்றனர் என்று மூத்த அமைச்சர் எ.வ. வேலு கொந்தளித்து இருக்கிறார்.

சென்னை: முதல்வருக்கு கொஞ்சம் கூட மரியாதை இல்லாம திமுக எம்எல்ஏக்கள் நடந்து கொண்டு வருகின்றனர் என்று மூத்த அமைச்சர் எ.வ. வேலு கொந்தளித்து இருக்கிறார்.

கடந்த 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இந்த ஆண்டில் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றது. முறைப்படி கவர்னர் சட்டசபையில் உரையாற்றி கூட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் வழக்கமாக நடைமுறையாக மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவையும் ஒத்தி வைக்கப்பட்டது.

பிறகு திமுகவின் அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சி எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எம்எல்ஏக்கள் சட்டசபையில் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் என்று சில யோசனைகள், அடிப்படையான விஷயங்கள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தின் போது எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் புள்ளி விவரங்களுடன் தெளிவான விளக்கங்களுடன் தங்கள் பதிலுரையை அவையில் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று முக்கியமாக அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

கூட்டத்தில் திமுக சட்டமன்ற கொறடா கோவி. செழியன் அனைவரையும் வரவேற்றார். பின்னர் தாம் அமரும் முன்னதாக யாரேனும் ஏதேனும் பேச விரும்புகிறீர்களா? பேசலாம் என்று கூறி இருக்கிறார். சரி… இது வழக்கமான கூட்டம் தானே, யாரும் பேச மாட்டார்கள் என்று பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் நினைத்திருந்தனர்.

ஆனால் அனைவரையும் ஒட்டு மொத்தமாக திரும்பி பார்க்கும் அளவுக்கு மூத்த அமைச்சர் எ.வ. வேலு இருக்கையில் இருந்து எழுந்து பேச ஆரம்பித்து உள்ளார். அவர் கூறியதாக வெளியான தகவல்களின் விவரம் வருமாறு:

என் மனசில் நீண்ட நாட்களாகவே ஒரு குறை இருந்து கொண்டே இருக்கிறது. அதனை நான் சொல்லியே ஆக வேண்டும். சட்டசபையில் ஜெயலலிதா இருக்கும் நேரத்தில் அக்கட்சி எம்எல்ஏக்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்று இங்கே இருப்பவர்கள் அனைவருக்கும் தெரியும்?

உடல் உபாதைகளுடன் இருக்கையில் அமர்ந்திருக்கும் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என ஒருவர் கூட கூட்டத்தை விட்டு எழுந்திருக்க மாட்டார்கள், எங்கேயும் நகர மாட்டார்கள், அவரவர் இருக்கும் இடத்தில் மிகுந்த பவ்யமாக உட்கார்ந்து இருப்பார்கள்.

ஆனால் இங்கே முதல்வர் நம் அனைவரும் முன்பே உட்கார்ந்திருக்கிறார். அப்போது நம் எம்எல்ஏக்கள் இங்கே இருந்து எழுந்து போகின்றனர், வருகின்றனர் பின்னர் எழுந்து செல்கின்றனர். முதல்வர் இங்கே நம் முன்னே அவையில் இருக்கும் போதே இப்படி செய்கிறீர்கள்? சட்டசபை நிகழ்வுகள் அனைத்தும் இப்படி நேரடி ஒளிப்பரப்பாக மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

அப்படிப்பட்ட சமயத்தில் நாம் எப்படி இருக்க வேண்டும்? இது கொஞ்சமும் சரியில்லை… முதல்வருக்கு யாரும் மரியாதையே தரவில்லை, ஏன் இப்படி என்று தெரியவில்லை என்று போட்டு தாக்கி இருக்கிறார். அவரின் இந்த பேச்சை கேட்டு ஒரு கணம் எம்எல்ஏக்கள் அரண்டு போயினராம். அடுத்த கணம் என்ன நடக்கும் என்று கிட்டத்தட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் பரிதவிப்பில் இருந்தனராம்.

அப்போது மைக்கை பிடித்த முதல்வர் ஸ்டாலின், என் மனதில் என்ன இருந்ததோ அதை அப்படியே பேசியிருக்கிறார் என்று கூறியிருக்கிறாராம். அதுவரைக்கு அமைச்சர் ஒருவர் பேசியதை லைட்டாக எடுத்துக் கொண்டு மூத்த எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலரும் ஒரு நிமிடம் அதிர்ந்தே விட்டனராம். லைட்டா இருக்கும் என்று நினைத்த அனைவரும் ஒரு கணம் வெயிட்டாக இருக்கிறதே என்று அரண்டு போய்விட்டனராம். விரைவில் இதற்கான மாறுதல்கள் தெரியும் என்று தகவல்கள் கூறுகின்றன….!!

click me!