டிடிவி தினகரனை நாங்கள் பொருட்படுத்தவில்லை. அவரது கட்சியை ஒரு கட்சியாகவே நாங்கள் பார்ப்பதில்லை. அவரது அட்ரஸ் காணாமல் போய்விடும் விலாசம் இல்லாத கட்சியாக அவரது கட்சி போய்விடும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வரிகள் ஏதேனும் நிலுவையில் இருந்தால் அதற்கு வட்டி வசூல் செய்யும் அரசாங்கமாக இந்த அரசு உள்ளது. மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது தேர்தல் அறிக்கையாக வெளியிட்டதில் இடம்பெற்றதைத் தான் ஆசிரியர்கள் கேட்கிறார்கள். அரசு பரிசீலித்து அவர்கள் அறிவித்த அறிவிப்பை நிறைவேற்ற வேண்டும்.
இந்த அரசாங்கம் ஒரு சர்வாதிகார போக்கில் உள்ளது. நாட்டில் நிலவுகின்ற பிரச்சினையை சமூக வலைத்தளங்களில் எடுத்துச் சொன்னால் அதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் குறிப்பாக அதிமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் போடுவது தான் இந்த அரசின் வாடிக்கையாக உள்ளது. மேலும் இதற்கெல்லாம் ஒரு காலத்தில் பதில் சொல்லியாக வேண்டும்.
தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பது தான் அரசின் நிலைப்பாடா? அன்புமணி ஆவேசம்
ஒட்டுமொத்தமாக அரசாங்கமே குளறுபடியாக தான் உள்ளது. அதனால்தான் காவல் துறையும் குளறுபடியாக உள்ளது. தினம்தோறும் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை போன்றவை எல்லாம் அன்றாட நிகழ்வாக இருக்கிறது. தொலைக்காட்சியிலும், பத்திரிகை செய்தியிலும் இதுபோன்ற செய்திகள் தான் இடம் பெறுகிறது. மேலும் பொம்மை முதலமைச்சர் ஆளுகின்ற நாட்டில் இது போன்ற நிலைமை தான் நிலவும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
உதயநிதி ஸ்டாலின் மாய உலகத்தில் மிதந்து கொண்டு இருக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் வரும் பொழுது அதற்கு ஒரு விடிவு காலம் பிறக்கும். கூட்டணி விவகாரத்தில் அதிமுக ஏற்கனவே தெளிவான முடிவை எடுத்து அறிவித்துவிட்டது. கூட்டணி குறித்து வி பி துரைசாமி கூறுகின்ற கருத்திற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது. எங்களுடைய நிலைப்பாட்டையும், தீர்மானத்தையும் நாங்கள், தெளிவாக அறிவித்து விட்டோம்.
கிராமசபைக் கூட்டத்தில் விவசாயியை காலால் உதைத்த விவகாரம்; பகிரங்கமாக மன்னிப்பு கோரிய ஊராட்சி செயலாளர்
எங்களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்க வேண்டும். தமிழ்நாடு வளர்ச்சி பெற புதிய திட்டங்கள் வழங்கப்பட வேண்டும். அதிக நிதி ஒதுக்க வேண்டும், சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்க வேண்டும். இதுதான் எங்களுடைய பிரதான கோரிக்கை. யார் ஆட்சிக்கு வந்தாலும் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெறுகின்ற பொழுது இதனை முன் நிறுத்துவோம். தமிழ்நாடு மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும். பல்வேறு மாநிலங்களை உள்ளடக்கிய தேசிய கட்சிகள் அந்தந்த மாநில பிரச்சினைகளைத் தான் அவர்களும் முன்னெடுக்கிறார்கள்.
டிடிவி தினகரனை நாங்கள் பொருட்படுத்தவில்லை. அவரது கட்சியை ஒரு கட்சியாகவே நாங்கள் பார்ப்பதில்லை. அவரது அட்ரஸ் காணாமல் போய்விடும் விலாசம் இல்லாத கட்சியாக அவரது கட்சி போய்விடும் என தெரிவித்தார்.